06/05/2017

இருபதாம் நூறாண்டின் நாஸ்ட்ரடாமஸ் - மூன்றாம் உலகப்போர் கணிப்புகள்...


மூன்றாம் உலகப்போர் பற்றிய நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் தொடங்கி, தினமும் எத்தனையோ விஷயங்கள் கேட்டு கொன்டே வருகிறோம்.

அனைத்தும் எற குறைய ஒரே பாணியில் தான் இருக்கிறது.

அந்த வரிசையில், கிழக்கு ஐரோப்பாவின் பால்கன் (Balkans) பகுதியை சேர்ந்த பாபா வான்கா (Baba vanga) என்ற பெண்மணியின் கணிப்புகள் மீண்டும் ஒரு சலனத்தை கிளப்பி இருக்கிறது. கூடுதல் கவன ஈர்ப்பின் காரணம் இவர்  பார்வை இழந்தவர்..

அவரது கணிப்புகளுள் முக்கியமானவை, புவி வெப்பமயம் அடைதல், 9/11 இரட்டை கோபுரம் தகர்ப்பு, 2004 சுனாமி, ஐரோப்பாவில் தீவிரவாதத்தின் எழுச்சி என்று இவரின் தீர்க்க தரிசன பட்டியல் நாஸ்ட்ரடாமஸ் போலவே நீள்கிறது.

கூறிய யாவையும் இன்று உண்மை என கண்டிர அவர் இல்லை, 1996 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார், இருந்தும் அவர் சொன்ன கணிப்புகள் வரிசையாய் நடந்தேறி கொண்டு இருக்கின்றன.

20 வருடங்களுக்கு முன்னே, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறிய பிரெக்ஸிட் (brexit) விஷயம் அன்றைக்கே கணித்து சொன்னார்.

மேலும், சமீபத்தில் சிரியாவில் நடந்த ரசாயன தாக்குதல் கூட அன்றே சொன்னார்.

45 வது ஜனாதிபதியாக பொறுப்பேற்பவர் நாட்டை காப்பாற்றுவதற்கு தனது சிறந்த முயற்சியை மேற்கொள்வார், அதற்கு மாறாக  இது துரதிருஷ்டவசமாக அமெரிக்காவின் முடிவுக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

எல்லாரும் அவர் மீது நம்பிக்கை வைப்பார்கள் இருந்தும் விளைவு எதிர்மறையாகவே இருக்கும்,  வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையே மோதல் அதிகரிக்கும்..

இந்த நிகழ்வில், வடக்கு மற்றும் தெற்கிற்கும் இடையேயான மோதல்கள் அமெரிக்க உள்நாட்டுப் போரைக் குறிக்கின்றன.

1861 மற்றும் 1865 க்கு இடையில் நடைபெற்ற போர், 620,000 மக்களைக் கொன்றது.

இருப்பினும், வடக்கு மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்கு போரினால் இருக்கும் பதட்டங்கள், அச்சுறுத்தல் மற்றும் மன அழுத்தம் அதிகரித்து வரும் ஒரு பிராந்தியத்தில் இது ஒரு குறிப்பு ஆகும்.

2010 ல் தொடங்கிய அரபு ஸ்பிரிங், உலகளாவிய முரண்பாட்டின் மேம்பாட்டாளியாக இருக்கும் என்றும், இது மூன்றாம் உலகப் போரை எளிதில் அர்த்தப்படுத்தி அதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார்.

சில புதிய கணிப்புகளும் இவர் சொல்லி சென்றிருக்கிறார்..

ஆசிய நாடு ஒன்று அமெரிக்காவை மிஞ்சிய வல்லரசு ஆகும் .

2028ஆம் ஆண்டில் பசியும் பஞ்சமும் தீர்த்திடும் வழிகள் பிறக்கும்.

3797 ஆம் ஆண்டு தான் பூமியின் கடைசி வருடமாய் இருக்க வேண்டும், அதற்குள் நாம் வேறு சூரிய குடும்பம் இடம் பெயர்ந்திருப்போம் என்ற கணிப்பு கூட அடங்கும்.

இவரது கணிப்புகள் 85% சரியாக நடந்தேறியதால், மூன்றாம் உலக போர் கணிப்பு சரியா இருக்க வாய்ப்புகள் உண்டு என்று நம்பபடுகிறது.

ஆனால், பாபா வான்கா விருப்பமோ, இது போல் அசம்பாவிதம் இல்லாமல் உலக மக்கள் அனைவரும் அமைதி நாடுவதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.