30/03/2018

தியானம் ஏன் எதற்கு எப்படி?


நம் அன்றாட வாழ்கையில் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் சக மனிதர்களால் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம்.

ஏன் இப்படி என்றால் பிரபஞ்சம் அப்படித்தான் உருபெற்றுள்ளது. ஆம் நேர் எதிர் ஆற்றல்கள் இரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தால் அந்த இடத்தில் இயக்கம் இருக்காது. ஆம் இன்பதுன்பம் இரண்டும் இல்லையென்றால் பற்றற்ற நியூட்ரான் தளத்தில் மோன நிலையில் இருந்துவிடுவீர்கள்.

அங்கு காலம் இடம் இருப்பு அனைத்தும் உறைந்து விடும். அதுதான் இன்பதுன்பம் அற்ற பிறவா நிலை.

நாம் இன்பம் ஏற்படும்போது வாழ்வை வரமாகவும், துன்பம் ஏற்படும்போது அதையே சாபமாகவும் பார்க்கிறோம்.

இந்த நிலையை போக்க ஒரே வழி தியானம். ஆம் தியானத்தின் போது மட்டுமே மனம் மூலத்தில் ஒடுங்குகிறது.

தியானம் பழக ஆசைப்படுபவர்கள் சில சின்ன விடயங்களை கடைபிடிக்க தவறிவிடுகிறார்கள்.

நம் உடல் மற்றும் மனதை ஒரே மாதத்தில் நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முடியும்.

ஆம் அதற்கான குறிப்புகள் இதோ...

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் பழகுங்கள். இடத்தை மாற்றாதீர்கள். ஒருநாள் கூட தவறவிடாதீர்கள்.

தடிமனான தடுப்பில் அமர்ந்து தியானியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பழக மறக்காதீர்கள். படிப்படியாக நேரத்தை கூட்டுங்கள்.

எந்த எண்ணம் வந்தாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் நிறைய வரும் வரட்டும். அதைபற்றி கவலை கொள்ளாமல் வெருமனே மூச்சை கவனியுங்கள்.

அவ்வப்போது கவனத்தை இழுத்துவந்து மூச்சில் நிறுத்துங்கள். ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல உங்களுக்குள் அமைதி பரவுவதை உணர்வீர்கள்.

ஒரு மாதத்தில் நீங்கள் ஆழ்ந்த தியான நிலையை அடைந்திருப்பீர்கள். இவ்வளவு தான் தியானம். இது உங்களுக்கு நடக்கவில்லை எனில் நான் மேலே கூறியிருப்பதை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றே அர்த்தம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.