05/04/2018

சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் கார்டை சொருகினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அதுவும் இலவசமாக...


தமிழகமே குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில், சிவகாசிக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமான கல்லம நாயக்கன்பட்டி கிராமத்தினர் நவீன மயமான நீர்த்தேக்கத்திலிருந்து இலவச சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெற்று வருகின்றனர். இங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் ATM Waterplant Card   வழங்கப்பட்டுள்ளன. தினசரி குடிநீர் பெற கார்டை ஸ்கேன் செய்தால் போதும்.

கல்லமநாயக்கன்பட்டி சிவகாசி அருகிலுள்ள ஒரு சிறிய கிராமமாகும். 600 குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில், கிராமத்தில் கடுமையான நீர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது மற்றும் கிராம மக்கள் தினசரி குடிநீர் பெற தொலைதூரம் செல்ல வேண்டியிருந்தது. அவர்களது கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, கிராம மக்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து தாமே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் அமைத்து  குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிராம நிர்வாகிகள் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அல்லது அரசாங்கத்தின் உதவியின்றி, திட்டத்திற்காக ஊர் மக்களே பணம் செலவழித்தனர். இதனால், ஒரு புதுமையான நுட்பத்தை பயன்படுத்தி, கிராமவாசிகள் தங்கள் குடிநீரின் பிரச்சினையை தீர்த்துவிட்டனர், ஒவ்வொரு குடும்பமும் தினசரி சமமான தண்ணீரை தினமும் பெறுகிறார்கள், அதுவும் இலவசமாக.

உண்மையிலே கல்லமநாயக்கன்பட்டி ஒரு Smart Village மட்டுமல்ல இந்தியாவிலுள்ள அனைத்து ஊர்களுக்கும் ஓர் முன்மாதிரி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.