05/04/2018

அரசு இடத்தில் அரசுபணி செய்ய தடையா.. நடவடிக்கை எடுக்கபடுமா.....?


திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி எல்கைக்கு உட்பட்ட கீழ நந்தன்குளம் என்ற ஊரில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்படும் சுகாதாரவளாகம் ஊருக்குள் இருந்தால் தான் மக்களுக்கு பயன்படும் என்று ஊர் மக்கள்  ஊருக்காக வாங்கி வைத்திருந்த நிலத்தை கவர்னர் பெயருக்கு எழுதி கொடுத்து அதில் சுகாதாரவளாகம் கட்டிதருமாரு கேட்டுக் கொண்டனர்.

அதன் அடிப்படையில் டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார் என்பவர் ஆரம்பம் முதலே அந்த நிலத்தை கையகபடுத்தும் நோக்கில் திசையன்விளை காவல் ஆய்வாளர் உதவியுடன் பணிகளை நிருத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

அவர்கள் பக்கம் எந்த முகாந்திரமும் இல்லாததால் திசையன்விளை காவல் ஆய்வாளரின் திட்டத்தின் பேரில் இதை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக்கி கட்டடுமான பணியை நிருத்தவேண்டும் என்ற நோக்கில் சந்தனகுமார் மற்றும் அவர்களது அடியாட்கள் இன்று கவர்னர் பெயரில் உள்ள நிலத்தில் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுவரும் சுகாதாரவளாகத்தில் அத்துமீறி நுழைந்து ரூப் காங்கிரீட் போடுவதர்காக அடித்து வைத்திருந்த பலகைகளை உடைத்தெறிந்துள்ளனர்.

இவை அனைத்தும் திசையன்வளை காவல் ஆய்வாளரின் ஆதரவோடு நடந்துள்ளது அரசாங்க நிலத்தில் நுழைந்து பொதுச்சொத்தை சேதப்படுத்திய வழக்கில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.