29/06/2018

நம் முன்னோர்கள் பயன்படுத்திய அணுஆயுதம் பிரம்மாஸ்திரமா - 2...


நமக்கு முன் பூமியில் வாழ்ந்த முன்னோர்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தியது அறிவியல் புனைகதை போன்று இருந்தாலும், நியூ மெக்சிகோ சோதனைக்கு பின் வெளியான டாக்டர். ஓபென்ஹெய்மர் அறிக்கையில் இதற்கான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றது.

எனக்கு பகவத் கீதையின் குறிப்புகள் நினைவுக்கு வருகின்றது...

ஓபென்ஹெய்மர் ஆங்கில பதிப்பில் 11 ஆம் பகுதி 32 வது வசனத்தைக் குறிப்பிட்டிருந்தார். "Now I am become Death, the destroyer of worlds", தமிழில் "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே அழிவார்கள்.

மகாபாரதம் மற்றும் பகவத் கீதை போன்ற புராணங்கள் கி.பி இரண்டு மற்றும் ஐந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டவை ஆகும். இந்தப் புராணங்களில் பண்டைய நாகரீகமான ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்தவர்கள் குறித்த கதைகள் இடம் பெற்றிருக்கின்றது.

இந்த நாகரீகமானது 12,000 ஆண்டுகளுக்கு முன் அல்லது முன்னதாக பதிவு செய்யப்பட்ட நாகரீகத்தை விட 5,000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோமியாவில் வாழ்ந்த பண்டைய நாகரீகம் ஆகும்.

இவை சுமார் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது மட்டுமின்றி இவற்றில் கடவுள்கள் பறக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதோடு அதிநவீன தொழில்நுட்ப திறன் மற்றும் வியக்க வைக்கும் ஆயுதம் போன்றவற்றை போர்க்களங்களில் பயன்படுத்தியதாக பழைய குறிப்புகளின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் பயன்படுத்திய ஆயுதமானது பிரம்மாஸ்திரம் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. பிரம்மாஸ்திரம் மூலம் பலர் உடல் தீயில் எரிந்தும், உருகியும் மரணித்திருக்கலாம். பண்டைய வானியல் கோட்பாட்டாளர்களும் பிரம்மாஸ்திரம் நிச்சயம் அணு ஆயுதமாக இருக்க வேண்டும் என்றே கூறுகின்றனர்.

அவற்றை பற்றி விரிவாக அடுத்த பகுதியில் காண்போம்... தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.