21/06/2018

சர்வாதிகாரிகளின் வாழ்க்கை இறுதி எப்போதும் மிக மிக மோசமானது...


அரசின் திட்டங்களில் உள்ள குறைகள் என எதை எதிர்த்து நியாயமான கேள்வி நாலை கேட்டாலும் உடனே வளர்ச்சி வளர்ச்சி என்கிறார்கள்.தேச விரோதிகள்  சமூக விரோதிகள் நக்சலைட் என முத்திரை குத்துகிறார்கள்.

நேற்று முருகன் ஐஏஎஸ் என்றொரு உலக மகா மாங்கா மடையன் நியூஸ் செவன் தொலைக்காட்சியில் சேலம் எட்டு வழி சாலை குறித்த விவாதத்தில் கலந்து கொண்டான். என்ன ஒரு அகங்காரம் திமிர்.

நெறியாளரையே தேச விரோதி என்னும் ரேஞ்சுக்கு நீ வா போ என ஒருமையில் பேசுவதும் மிரட்டல் தொனியில் சவால் விடுவதும் மக்களை இப்படித் தான் அடக்கி ஒடுக்க வேண்டும் என்றும் அவன் பேசிய பேச்சுக்களை கேட்ட போது இப்படிப் பட்ட மாங்கா மடையனுங்க எப்படி ஐஏஸ் பதவியில் உட்கார்ந்து கொண்டு இருந்திருக்கானுங்க என்றே எண்ண தோன்றியது. இந்த முருகன் கதை இன்று நேற்றல்ல ஊடகங்களில் பேசும் ரொம்ப வருசமாவே இப்படித் தான் என்பது தனிக் கதை.

உலக மகா திட்டங்களை எல்லாம் மக்கள் நலனுக்காக என்று திணிக்கும் போது மக்களிடம் உட்கார்ந்து திட்டத்தை குறித்து பேச வேண்டும். அவர்களுக்கு சந்தேகம் இல்லாத வகையில் புரிய வைக்க வேண்டும்.

நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையாக மார்க்கெட் விலையை விட நான்கு மடங்கு என்று மத்திய அரசு வரையறையாக இருப்பதாக சொல்லும் போது மாநில அரசு சரியான இழப்பீட்டு தொகை மற்றும் அதனை உடனடியாக வழங்கும் வேலைகளை செய்யாமல் மக்களை அடக்கி ஒடுக்கி சிறையில் அடைத்து எதையும் சாதிக்கலாம் என்ற சர்வாதிகார போக்கு எல்லா காலத்திலும் வெற்றி அடையாது. மிகப் பெரிய சர்வாதிகாரிகளின் வரலாறுகளே முடிவில் மிக கொடூரமாய் முடிந்த கதைகளை படியுங்கள்.

மதுரை விமான நிலையத்துக்காக கையகப் படுத்தப் பட்ட நிலங்களை சரியாக பயன் படுத்தவும் இல்லை. உரிய இழப்பீட்டு தொகையை கூட பல ஆண்டுக்கணக்காக தராமல் மோசடி செய்கிறார்கள் என மாநிலம் முழுக்க ஏழை எளிய விவசாய மக்களின் கண்ணீர் குரல்கள் இப்போதும் கேட்க முடிகிறது. எந்த திட்டத்திலும் உரிய இழப்பீடும் இல்லை.

சரியான நேரத்தில் பணத்தை கொடுக்காமல் ஐந்து ஆண்டுகள் பத்து ஆண்டுகள் வரை நீடிக்கும் பல உதாரணங்கள் மாநிலம் முழுக்க இருக்கிறது. அரசாங்க நில கையப் படுத்தல் என்றாலே அது மாபெரும் மோசடி மற்றும் அராஜகம் என்று மக்கள் எண்ணும் அளவுக்கு தான் முந்தைய இன்றைய வரலாறு இருக்கிறது.

விவசாய விளை நிலங்களை பிடுங்கி கொண்டால் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி சொல்ல வேண்டும்.

கூடவே பல மடங்கு இழப்பீடு மற்றும் உரிய காலத்துக்குள் அந்த இழப்பீடு என எல்லா வழிகளையும் மக்களிடம் வெளிப்படையாக பேசி மக்களை சரி செய்யும் எந்த முயற்சிகளையும் செய்யாத அடக்குமுறை தவறு.

அரசின் எந்த சமரச முயற்சிகளுக்கும் இழப்பீடுகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில் திட்டத்தை மறுபரிசீலனை செய்வதும்  மாற்று வழிகளை சிந்திப்பதும் தவறானதல்ல.

ஆனால் மக்களிடம் சரியான வகையில் பேச்சு வார்த்தை புரிதல் இழப்பீடு வெளிப்படைத் தன்மை என்று எதையுமே செய்யாமல் ஒரு அரசு சர்வாதிகாரமாக எல்லாவற்றையும் சாதிக்க நினைப்பது முட்டாள்தனம்.

மக்கள் நலன் மற்றும் மக்கள் தான் அரசு என்ற நிலையில் இருந்து சிந்தித்து செயல்பட வேண்டிய அரசாங்கம் குண்டர்களையும் தடியர்களையும் காவல்துறை என்ற பெயரில் வைத்து ரவுடித் தனத்தால் எல்லாவற்றையும் சாதிக்க நினைப்பதன் முடிவு ஆட்சியாளர்களின் அழவு. அதற்கான காலம் நெருங்கி விட்டது.

எடப்பாடி சாமி என்று தியேட்டரில் விளம்பரம் வேற தேடும் அளவுக்கு என்ன கூந்தலை புடுங்கி தள்ளிட்டாரு எடப்பாடி.

சர்வாதிகாரிகளின் முடிவு என்று ஹிட்லர் காலத்தை எல்லாம் உதாரணமாக எடப்பாடிக்கு சொல்ல மாட்டேன். கண் கண்ட சாட்சியாக ஜெயலலிதா இருக்கும் போது..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.