29/07/2018

சிலுவை யுத்தங்கள் − 3...


சிலுவை யுத்தங்களின் காரணங்களை நாம் ஆராய முற்படும் போது பல காரணங்களை வரலாற்றாசிரியர்கள் நமக்கு சொல்லிச்செல்கின்றனர்.
முஸ்லிம் உலகுக்கும் கிறிஸ்தவ உலகுக்கும் இடையில் சிலுவைப் போார்கள் நடைபெற பல காரணங்களைக் கூறலாம் அவற்றை நோக்குவோம்.

மதவெறி...

மத ரீதியாகப் பல     பிரிவினராகப் பிளவுப்பட்டிருந்த கிறிஸ்தவர்கள், முன்னேற்றத்தின் உச்சத்தை எட்டியிருந்த இஸ்லாத்தின் அரசியல் ஆளுமையைக் கண்டு பொறாமைக் கொண்டு அதை தடுத்து நிறுத்தி தமது சாம்ராஜ்யத்தையும் மதத்தையும் பரப்புவதை இலக்காகக் கொண்டிருந்தனர்.

கிறிஸ்தவ சமயத்தை உலகம் முழுதும் பரப்பி முஸ்லிம் ஆசியாவை கிறிஸ்துவ ஐரோப்பாவின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து கிறித்துவ ஆசியாவாக மாற்ற வேண்டும் என்ற நோக்கிலேயே இப்போரை ஆரம்பித்தனர்.உண்மையில் இப்போரை முஸ்லிம் ஆசியவுக்கும் கிறித்துவ ஐரோப்பாவுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் என்று கூறுவதை விட இஸ்லாத்துக்கும் கிறித்துவத்துக்கும் இடையில் நடைபெற்ற போர் என்று கூறுவதே பொருத்தமானது.

குலபாஉர்ராஷிதீன்கள் உமையாக்கள் மற்றும் அப்பாஸிய ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் முஸ்லிம்களிடம் இழந்த பிரதேசங்களையெல்லாம் ரோம கிறித்தவர்கள் மீட்க விரும்பினர். கிறித்துவர்களிடையே ரோம திருச்சபை, கிரேக்க திருச்சபை என இரண்டு வகுப்பினர் காணப்பட்டனர். இவையிரண்டிலும் ஓரளவு செல்வாக்கில் மிகைத்திருந்த உரோம திருச்சபையைச் சேர்ந்தவர்கள் கிரேக்க திருச்சபைக்கு எதிராகவும் இஸ்லாத்திற்கெதிராகவும் கி.பி.11−ஆம் நூற்றாண்டில் போர் தொடுத்தனர். இவர்கள் முஸ்லிம்களுக்கெதிரான தமது போர் நடவடிக்கைகளை மறை முகமாகவும் மேற்கொண்டனர்.

ஆசியாவிலும்,ஆப்பிரிக்காவிலும் பரவலாகச் செல்வாக்குப் பெற்றுக் காணப்பட்ட இஸ்லாம்  ஐரோப்பாவின் கதவையும் தட்டியது. இதனைக் கண்ட கிறித்தவர்கள் ஏற்கனவே ஆசியாவையும் ஆப்பிரிக்காவிலும் தன் கிளைகளை வளர்த்துக் கொண்ட இஸ்லாம் எங்கு ஐரோப்பாவிலும் வேறூன்றி விடுமோ என அங்கலாயினர்.

இதன் காரணமாக பலஸ்தீனத்தில் அமைந்துள்ள பைத்துல் முகத்தஸைத் தரிசிக்கச் செல்லும் கிறித்துவ யாத்திரீகர்களை முஸ்லிம்கள் தாக்கி துன்புறுத்துகின்றனர் என பொய்யானப் புறளி ஒன்றைப் பரப்பி முஸ்லிம்கள் மீது வீண்பழி சுமத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கிறித்துவ அறிஞர்கள் முஸ்லிம்களிடமிருந்து இத்தூய இடத்தை மீட்க வேண்டும் என மக்களிடம் ப்ரச்சாரங்களைத் தொடுத்து கலவரத்தைத் தூண்டி போருக்கு ஆயத்தமானார்கள்.

தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.