29/07/2018

ஓடாவி சமூகம்.. பழங்கால படகு போக்குவரத்து.. வைரம் பாய்ந்த கட்டை என்பது எதனால்?


அன்றைய காலகட்டத்தில் படகு போக்குவரத்து தான் அருகருகே உள்ள நிலங்களை இனைத்து மக்கள் வியாபாரம் உணவு போன்றவைகளை பரிமாற்றம் செய்து வாழ முடிந்தது.

இதில் அவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை இடி மின்னல்.

நிலத்தை விட நீரில் இடியின் தாக்குதல் அதிகமாக இருக்கும்.

இதனால் பல படகுகள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பல நமது முன்னோர்கள் இறந்திருக்க வேண்டும்.

இதை தடுக்க இவர்கள் எடுத்த முடிவு தான் கருங்காலி மரம்.

கருங்காலி மரம் என்பது தற்சமயம் கிடைப்பது அரிது.

இந்த மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் இரும்பை போன்று திடமான உறுதியுடன் இருக்க கூடியது.

இந்த மரத்தின் உள் பகுதியை வைரம் என்பார்கள்..

(வைரம் பாய்ந்த கட்டை என்பது இதன் காரணமாக தான் வந்தது)

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த மரத்தின் உட்பகுதி மிகவுமே திடமானது.

இந்த மரத்தை வெட்டி எடுத்துத்தான் படகு செய்ய ஆரம்பித்தனர் நமது மூதாதையர்கள்.

இதன் தன்மை தான் லேசான மணல் திட்டுக்களையும் தாண்டிவிடும் ஆழமான கடல் பகுதியையும் தாண்டும்.

 ராட்சத அலைகள் வரும்போது எம்பி குதித்து நீந்தும் தண்மையையும் இந்த கருங்காலி மரம் தன்மையை கொண்டு இருந்தது.

ஒரு வேளை இடி கருங்காலி மரத்தை பயன்படுத்தி செய்யப்பட்ட படகில் விழுந்தால் அதை அப்படியே கடத்தி கடலில் நகர்த்தி விடும் தண்மையையும் கொண்டுள்ளது இந்த மரம்,

கடலில் விழும் இடி காலப்போக்கில் அது சிறிய தீவாக மாறும்  என்ற உண்மையும் நமக்கு தெரிகிறது.

இன்றைய மனிதர்களே போகாத கடல்களில் இப்படி தீவுகள் இருப்பதற்கு காரணம் கருங்காலி மரத்தின் விளைவு என்ற உண்மையை
தெளிவுபடுத்துகிறது.

இது ஒரே நாளில் நடப்பது இல்லை காலங்கள் கடந்து நடக்கும் நிகழ்வுகள்.

ஓடாவி சமூகம்..

இவர்கள் தான் இதை நேர்த்தியாக செய்யக் கூடியவர்கள்

இவர்கள் செய்த பாய்மர கப்பல்கள் இந்த கருங்காலி மரத்தை எடுத்து செய்ததால் பெரும்பாலான கப்பல் விபத்து அன்றைய தினம் தடுக்கப்பட்டது.

இந்த ஓடாவி சமூகம் பாய் மர கப்பல்கள் செய்து வாழ்ந்து வந்த சமூகம் அன்றைய காலகட்டத்தில் இவர்களுக்கென்று மரியாதை உண்டு பல மக்கள் இந்த சமூகத்தில் வாழ்ந்துள்ளனர்.

இன்றைக்கு இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

பயணம் என்பது உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் அப்படிப்பட்ட விஷயத்தை செய்பவர்களுக்கு அன்றைய மக்கள் மற்றும் மன்னர்கள் இவர்கள் மீது தனி மரியாதை வைத்து இருந்தனர்.

காரணம் அரசனுக்கு போர் கப்பல் தயாரிப்பது இவர்கள் தான் இப்படி மதிக்கப்பட்ட ஒரு சமூகம் இன்றைக்கு அழிக்கப்பட்டுவிட்டது.

இந்த பதிவு தற்சமயம் போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சினையில் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் இருக்கும் கையாலாகாத அரசையும்
குறிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.