29/07/2018

இன்று சர்வதேச புலிகள் தினம்: எண்ணிக்கை அதிகரிப்பதால் இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி...


உலகம் முழுவதும் 13 நாடுகளில் உள்ள காடுகளில் புலிகள் வாழ்கி ன்றன. இந்தியா மற்றும் வங்க தேசத்தின் தேசிய விலங்கு புலி. 19-ம் நூற்றாண்டில் இவ்வுலகில் லட்சத்துக்கும் அதிகமான புலிகள் இருந்ததாக ஆய்வுகள் தெரிவிக் கின்றன. அவற்றில் 97 சதவீதம் அழிந்து, தற்போது வெறும் 3,200 என்ற எண்ணிக்கையில் புலிகள் குறைந்துவிட்டன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியா வில் 2 ஆயிரம் என இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2006-ம் ஆண்டில் 1,411 ஆகக் குறைந்தது. இது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரஷ்யாவில் கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாநாட்டில், புலிகள் வாழும் 13 நாடுகள் பங் கேற்றன. அதில், அழிந்துவரும் பட்டியலில் இருக்கும் புலிகள் இனத்தைப் பாதுகாக்க வலிறுத்தி யும், புலிகளின் எண்ணிகையை உயர்த்தும் நோக்கிலும் ஒவ் வொரு ஆண்டும் ஜூலை 29-ம் தேதியை சர்வதேச புலிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, வன உயிர் பாதுகாப் புச் சட்டம், புலிகள் பாதுகாப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டன. மேலும், இயற்கை பாதுகாப்பு உலக நிதியம் மூலம் ஏற்படுத்தப் பட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளால் புலிகளின் எண்ணிக்கை அதி கரிக்கத் தொடங்கின.

இந்தியாவில் 2010-ல் 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2014-ல் 2,226 என அதிகரித்தது. இது இயற்கை ஆர்வலர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.சுந்தரராஜூ கூறிய போது, “மலேசியன், இந்தோசீனா, சுமத்ரன், பெங்கால், சைபீரியன், தென்சீன, பாலினீஸ், காஸ்பியன், ஜவான் என 9 வகையான புலி இனங்கள் உலகில் இருந்தன. இவற்றில் பாலினீஸ், காஸ்பியன், ஜவான் மற்றும் தென்சீனப் புலி இனங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. சுமத்ரன் இனம் அழியும் விளிம்பு நிலையில் உள்ளது.

மனிதர்களின் வேட்டைக் குணம், புலிகள் வாழும் காடுகள் வழியாக சாலைகள் அமைத்தல், ஆக்கிரமிப்பு செய்தல் போன்ற காரணங்களால்தான் புலிகள் இனம் அழிவின் விளிம்புக்குச் சென்றது. புலிகள் வாழும் காடுகள் எப்போதும் நீர்வடிப் பகுதியாகத் திகழும். ஒரு புலியைக் காப்பதன் மூலம் 100 சதுர அடி கிலோ மீட்டர் பரப்புள்ள காட்டை நாம் பாதுகாக்கிறோம்.

புலிகள் முற்றிலும் அழிந்தால், அவை வாழும் சூழியல் தொகுதி யாகிய காடுகளும் அழியும். காடு கள் மனிதனின் முக்கிய வாழ்வா தாரம். இந்தியாவில் மட்டும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ், 49 புலிகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. அழிவின் விளிம்புக்குச் சென்ற புலிகள் இனத்தின் எண்ணிக்கை பல்வேறு காலகட்ட விழிப் புணர்வுக்குப் பிறகு அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தமிழ்நாட்டில் 229 புலிகள்...

புலிகளின் எண்ணிக்கை குறித்து, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்துகிறது. கடந்த 2014-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 229 புலிகள் உள்ளன. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆகிய காப்பகங்கள் செயல்படுகின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.