29/07/2018

மூன்றரை வருடம் கழித்து ரயிலில் வந்த உரம்.. அதிர்ச்சி சம்பவம்...


கடந்த 2014ம் ஆண்டு விசாகப்பட்டிணம் துறைமுகத்தில் குப்தா என்பவர் ரூ 10 லட்சம் மதிப்பிலான உரங்களை மத்திய பிரதேச மாநிலம் பஸ்திக்கு கொண்டு செல்ல சரக்கு ரயில் பெட்டி ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன்படி விசாகப்பட்டிணத்தில் இருந்து பஸ்தியை நோக்கி சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. விசாகப்பட்டிணத்தில் இருந்து பஸ்திக்கு சுமார் 1400 கிலோ மீட்டர் ஆகும்.

குறிப்பிட்ட நாளில் அந்த ரயில் சென்று விட்டது.  ஆனால் குப்தா பதிவு செய்திருந்த உரமூட்டைகள் அடங்கிய பெட்டியை மட்டும் காணவில்லை. பல மாதங்களாகியும் தான் பதிவு செய்திருந்த பெட்டி வராததால் ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்களும் பெட்டி எங்கே போனது தேடி தேடி பார்த்தனர். ஆனால் அவர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த குப்தாவும் இது குறித்து மறந்து போய் விட்டார்.

இந்த நிலையில் அந்த ரயில் பெட்டி இந்த மாதம் ஜூலை 25ம் தேதி பஸ்தி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதாவது சுமார் மூன்றரை வருடங்கள் கழித்து வந்துள்ளது. பின்னர் இது குறித்து குப்தாவுக்கு தகவல் தெரிவித்து உங்கள் உர மூட்டைகளை எடுத்து செல்லுங்கள் என்று கூறி உள்ளனர். ஆனால் குப்தாவோ இத்தனை வருடங்கள் கழித்து வந்துள்ள கெட்டுபோன உர மூட்டைகள்  எனக்கு வேண்டாம். எனக்கு அதற்குரிய நஷ்டஈட்டை கொடுங்கள் என்று கூறி உள்ளார்.

ரயில்வே அதிகாரிகளும் இந்த விஷயத்தில் யார் தவறு செய்தார்கள்  என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.