07/08/2018

சிலுவை யுத்தங்கள் −20...



இரண்டாவது சிலுவைப் போர் (கி.பி − 1147 − 1149) −4...

ஸலாஹுத்தீனும் சிலுவைப்போரும்:

ஈராக்கின் வடதிசையிலுள்ள டைகிரீசு நதிக்கரையில் அமைந்திருந்த திக்ரீத் கோட்டையில் ஹி.532(கி.பி.1138)−ஆம் ஆண்டு பிறந்த இவர் டமஸ்கஸில் வளர்ந்தார்.

ஹி.559ம் ஆண்டு (கி.பி.1164) தனது சிறிய தந்தை ஷேர்கோவுடன் முதன் முறையாக எகிப்துக்குச் சென்றார். பின்னர் அங்கு நிலவிய பல யுத்தங்களுக்குத் தலைமை தாங்கிச் சென்று அச்சண்டைகளில் வெற்றியடைந்தார்.

துணிவு,வீரம் மனஉறுதி, நேர்மை, அன்பு, கருணை போன்ற அருங்குணங்களின் அமைவிடமாக விளங்கிய இவர், மக்கள் நலனுக்காகவே தம்மை முழுமையாக அா்ப்பணித்திருந்தார்.

ஸலாஹுத்தீன் எகிப்தின் இராஜப் பிரதிநியாக நியமிக்கப்பட்ட சில காலத்திற்குப் பின் நூருத்தீன் மரணமானதும் எகிப்தின் சுயாதீனத் தலைவராகத் தம்மைப் பிரகடனப்படுத்தி ஐயூபிய ஆட்சியையும் உருவாக்கினார். அப்போது அவரது வயது 35.இவர் நஜ்முத்தீன் ஐயூப் என்பவரின் மகனாவார்.இவரின் தந்தையும் இமாதுத்தீன் ஸங்கீ, நூருத்தீன் ஸங்கீ ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஸலாஹுத்தீனீன் தந்தை நஜ்முத்தீனுக்கு ஷேர்கோ எனும் சகோதரரும் இருந்தார். இவரும் முன்னைய ஸன்கீ வர்க்கத்தினரின் ஆட்சிக் காலத்தில் பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹி.568 ஆம் ஆண்டு ஸலாஹுத்தீன் ஜோர்தானிலிருக்கும் கர்க் பிரதேசத்தை வெற்றி கொள்வதற்காகப் படை நடத்திச் சென்றார்.இக்கட்டத்தில் எகிப்துக்கான பிரதிநிதியாகத் தனது தந்தையை நியமித்துவிட்டுச் சென்றிருந்தார். ஸலாஹுத்தீன் நாட்டிலில்லாத இச்சந்தர்ப்பத்தில் அவரது தந்தை நஜ்முத்தீன் ஐயூப் மரணமானார்.

எனவே,எகிப்தில் தங்கியிருக்க வேண்டிய கட்டாய நிலை ஸலாஹுத்தீனுக்கு ஏற்பட்டது.இதனால் இதே ஆண்டு ஸலாஹுத்தீன் தனது மூத்த சகோதரரான ஷம்ஷுத்தவ்லா தூரான்ஷாஹ் என்பவரை நோபியாப் பிரதேசத்தைக் கைப்பற்ற அனுப்பி வைத்தார்.அப்பிரதேசத்தை வெற்றி கொண்டு "இப்ரீம்" எனும் கோட்டையையும் கைப்பற்றினார்.

நோபியாப் பிரதேசத்தின் வருமானம் அவ்வளவு தாரளமாக இருக்கவில்லை. அரச செலவினங்களை ஈடு செய்வதற்கான போதிய வருமானம் அங்கு வரவில்லையாதலால், "இப்ராஹீம்" என்ற குர்த் இனத்தவரில் ஒருவரை அக்கோட்டைக்கான தனது பிரதிநிதியாக நியமித்துவிட்டுச் சென்றுவிட்டார்.

ஸலாஹுத்தீனுக்கு தூரான்ஷா எனும் பெயரில் ஒரு சகோதரரும் இருந்தார்.இவரும் படையில் முக்கிய பதவியையே வகித்து வந்தார்.

ஹி.569(கி.பி.1174)−ம் ஆண்டு ஸலாஹுத்தீன் தமது சகோதரா் தூரான்ஷாஹ்வை யமனைக் கைப்பற்றுவதற்காக அனுப்பி வைத்தார். அப்பிரதேசம் முழுவதும் அப்படியே அவரது கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஹி.570−ஆம் ஆண்டு வரை அங்கு தங்கியிருந்த அவர், ஒரு பிரதிநிதியை நியமித்து விட்டுச் சிரியாவுக்குச் சென்றுவிட்டார்.

ஹி.576−ஆம் ஆண்டு ஸ்கந்திரிய்யாவில் மரணமடைந்தார்.துரதிஷ்டவசமாக இதே ஆண்டு நூருத்தீன் ஸன்கீ இறையடி சேர்ந்தார்.என்றாலும் படைநடத்திச் சென்ற தூரான்ஷாஹ் யமன் பிரதேசத்தைக் கைப்பற்றியதோடு, அப்பிரதேசத்துக்கான ஸலாஹுத்தீனின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி செய்தார்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.