07/08/2018

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பத்திரிகைகளின் மூலம் தவறான தகவல்களை தொடர்ந்து விளம்பரம் செய்து பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகிறார்கள்...


ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இனி திறக்க  வாய்ப்பில்லை என்றும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று   மாவட்ட ஆட்சியர் 30.7.2018 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் 5.8.2018  பெரும்பாலன பத்திரிகைகளில் வெளிவந்த் விளம்பரத்தில்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையின் ஊழியர்களாகிய நாங்கள், எங்கள் ஆலையை சீரிய நிலையான முறையிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு எற்படாத வகையில் எப்பொழுதும் இயக்குவோம் என்று உறுதியளிக்கிறோம் .

என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் உழியர்கள்
P. திவாகரன் உற்பத்தி இயக்குனர்.
P. சுப்பையா முதன்மை சுற்று சூழல் அலுவலர்
A. சர்வேசன் சமூக மேம்பாட்டு மேலாளர்.

ஆகியோர் தற்போது ஆலை இயங்கி கொண்டு இருப்பது போலவும் இனியும் தொடர்ந்து இயக்குவோம் என்பது போல் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஆலை திறக்கப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறி வரும் நிலையில் பத்திரிகைகளின் மூலம் வீண் வதந்திகளை பரப்பிவரும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் நிவாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொது மக்கள் கூறி வருகிறார்கள்.

விளம்பரம் என்ற பெயரில் பத்திரிகைகள் வாயிலாக  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம்  வெளியிடும் தவறனா தகவல்களை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க துணை போகக்கூடாது என்றும் பத்திரிகைகளில் தொட்ர்ந்து இது போன்ற மக்கள்விரோத செயல்களில் ஈடுபட்டால் பத்திரிகை புறக்கணிப்பு நடத்தப்படும் என்று தெரிவித்தார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.