24/08/2018

கடுவெளிச் சித்தர் பாடல்...


செப்பரும் பலவித மோகம் - எல்லாம்
சீயென் றொறுத்துத் திடங்கொள் விவேகம்
ஒப்பரும் அட்டாங்க யோகம் - நன்றாய்
ஓர்ந்தறி வாயவற் றுண்மைசம் போகம்.

பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.

சொல்லொன்னா பல மோகங்கள் இவ்வுலகில் உள்ளன, அதை ‘சீயென’ வெறுத்து, ஒதுக்கி, அதை திரும்ப விடாம மனதை திடப்படுத்தி, எட்டு மஹா யோக சித்திகளான.

அனிமா, மகிமா, லகிமா, ஹரிமா, பிராப்தி, பிராகாமியம், வசித்வ, ஈசத்துவம் பெற வேண்டும்.

1. அனிமா - அடுத்தவர் கண்களுக்கு தெரியாமல் இருப்பது.

2. மகிமா - ஒரே நேரத்தில் பல இடங்களில் தெரிவது.

3. லகிமா - உடலை லேசாக ஆக்கி கொள்ளுதல்.

4. ஹரிமா - உடலை கனமாக்கி கொள்ளுதல்.

5. பிராப்தி - நினைத்த நேரத்தில் எங்கும் செல்லுதல்.

6. பிராகாமியம் - விருப்பபடி சகல பொகங்களையும் அனுபவித்தல்.

7. வசித்வ - எல்லா உலக்கத்தையும் தன்வசப்படுத்துதல்.

8. ஈசத்துவம் - அனைத்தையும் தன் வசப்படுத்துதல.

ஒப்பற்ற செல்வமான இந்த எட்டு யோகங்களை பெறமுடியாமல் இருக்கும் தடைகளை தரும் போகத்தை தவிர்க்க வேண்டும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.