24/08/2018

முக்கொம்பு மேலணை உடைந்தது...


சமீபத்தில் சில மாதங்கள் முன்பு இந்த பாலம் பொதுப்பணித்துறையால் பராமரிப்பு பனி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது...

காவிரி ஆற்றில் வரக்கூடிய நீர் கொள்ளிடம் வழியாக வீணாக கடலில் கலப்பதைத் தடுத்து, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில், பிரிட்டிஷ் ராணுவ பொறியாளரும், தென்னிந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவருமான சர்.ஆர்தர்  காட்டன் என்பவர், கரிகாலச் சோழனின் கட்டுமான முறையைப் பின்பற்றி 1836 -ம் ஆண்டு முக்கொம்பு மேலணையில் கொள்ளிடம் பகுதியில் 45 மதகுகளுடன் அணைகட்டி நீரைச் சேமிக்க வழி வகுத்தார்.

6.3 மீட்டர் அகலம் கொண்ட இதன் மேல்பகுதி வழியாக வாத்தலை - முக்கொம்பு இடையே கார், இரு சக்கர வாகன போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 180 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நின்று, டெல்டா மக்களின் வாழ்வதாரத்தை உயர்த்த துணை நின்ற இந்த அணையின் ஒரு பகுதி தற்போது (22.08.2018 அன்று இரவு) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.