24/08/2018

சென்னை புழல் ஏரியின் அவல நிலை...


1876 வருடம் சென்னை மக்களின் எதிர்கால குடிநீர் தேவையை கருதி ஆங்கில அரசினர் புழல் ஏரியை அமைத்தனர்.

ஆனால் நாம் எவ்வளவு கேவலமாக பராமரிக்கிறோம் தெரியுமா ?

சமிபத்தில் pwd ஊழியரிடம் பேச நேர்ந்தது புழல் ஏரிக்கு ஆந்திர கிருஷ்ணா நதி நீர்  வரும் பாதையில் மக்கள் மனித  கழிவு நீரை கொட்டுகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் இடத்தில் பெண்கள் மாதவிடாய் பஞ்சுகள் முதல் அனைத்து வகையான கழிவு பொருட்களும் வருகின்றதாம் எவ்வளவு மோசம்.

கேட்கவே அருவருப்பா இருக்கிறது.

இந்த  தண்ணீரை தான் நம் மக்கள் குடிக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய கொடுமை அதனை பற்றி தான் இந்த பதிவு  .

பொதுமக்கள் உண்ணும் உணவு சுகாதரமா இருக்கவேண்டும் என்று நினைக்கும் அரசு.

பல்லாயிரக்கணக்கான மக்கள் குடிக்கும் குடிதண்ணீர் தேங்கும் நீர் நிலையில் சுகாதரத்தை காட்டவில்லை என்பதே உண்மை.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் புழல் ஏரி, குப்பைகள் கொட்டப்படுவதால் மாசடைந்து வருகிறது.

மொத்தம் 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி, சென்னை மக்களின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்நிலையில் செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வண்டி, வண்டியாக கொண்டு வரப்பட்டு புழல் ஏரியை சுற்றிலும் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.

குப்பைகள் மூலம் உருவாகும் கிருமிகள் நன்னீரில் கலப்பதால் புழல் ஏரியின் நீரை அருந்தும் மக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, காலரா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த குப்பைகளை தீவனமாக உண்ணும் கால்நடைகளும் உயிரிழக்கும் அவலநிலை உருவாகிறது.

புழல் ஏரியை சுற்றிலும் கொட்டப்படும் குப்பைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் நிகழ்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் குப்பைகளை எரியூட்டுவதால் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலாலும், சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் கரும் புகை, சாம்பல் படலத்தால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.

புழல் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர் முதல் மாநகராட்சி அதிகாரிகள் வரை பலமுறை புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியத்தால் ஏரியிலிருந்து உபரி நீரை கடலுக்கு கொண்டு செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சென்னையில் கனமழை பெய்தால் அப்பகுதி வெள்ளத்தில் தத்தளிக்க நேரும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.