24/08/2018

கேரளாவை சார்ந்த யூசுஃப் அலி எனும் மலையாளி அரபு தேசங்கள் முழுதும் எண்ணற்ற LuLu Mall 'களை வைத்துள்ளார்...


அதன் மூலம் அரபு தேசங்களின் பல மன்னர் குடும்பங்களோடும் மிக நெருக்கமான உறவில் இருப்பவர்.

அவருடயை லாபியின் பேரில்தான் அமீரகம், இந்தியாவின் மத்திய அரசாங்கம் வழங்கியதைவிட பல மடங்கு அதிகமான உதவித் தொகையை கேரளாவிற்கு வழங்கி இருக்கிறது.

எதிலும் லாப நோக்கத்தை மட்டுமே பார்க்கும் ஒரு முதலாளி தனது மண்ணையும், தனது மக்களையும் இவ்வளவு தூரம் நேசிப்பது (இது முதல் முறையல்ல) பாராட்டுதலுக்குரியது.

கருணாநிதி குடும்பத்திடம் யூசுப் அலியை விட பலமடங்கு அதிக பணமிருக்கும்; அதைவிட அதிகமான பணம் மாறன்களிடம் இருக்கும்; அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத பணம் பெரியார் மாளிகை ட்ரஸ்ட்களில் கொட்டிக் கிடக்கிறது.

முரசொலி மாறன் நினைவிழந்து இனி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தும், அவரை அமைச்சராகவே தொடர்ந்து பல மாதங்கள் வைத்திருந்தது திராவிடம்.

 ஏனெனில் அந்த சலுகைகளையும், அப்போல்லோ செலுவுகளையும் அரசாங்கம் ஏற்குமல்லவா.

இந்திய ஒன்றியத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் ஒரு அமைச்சர் பதவி என்பது ஒரு பொக்கிஷம், அதை தமிழக மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்த வேண்டும்.

ஆனால் காலம்காலமாக அமைச்சர்களை திராவிடம் யார் வீட்டுக்கு சேவுகம் செய்ய பயன்படுத்துகிறது?

இப்போதுவரை அப்போலோவுக்கு மாறனுக்கான வைத்திய செலவை மாறன்/கருணா குடும்பம் செலுத்தவில்லை. மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

மறுபுறம், தமிழர்களின் பல்லாயிரம் கோடி பணத்தை திருடி, அதை வேகவேகமாக சீமாந்திராவின் 'புது தலைநகரை' கட்டுமானம் செய்வதில் முதலீடு செய்கிறது மாறன் குடும்பம்.

யூசுப் அலியை போன்றதொரு 'தங்கள் பிடியை' மீறிய தமிழ் முதலாளி உருவாகிவிடாது தடுப்பதில்  காலம் காலமாக சிரத்தையாக இருக்கிறது திராவிடம்.

கல்வியை பாமர ஏழை தமிழர்களிடம் பல லட்சங்களுக்கு விற்கும் பெரியார் மடத்திற்கும் பகுத்தறிவிற்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா?

இவ்வளவுக்கும், அரபுலக அரசியலை  பார்த்தால்...

இந்த உலகில் பொதுவுடமை பூத்து குலுங்காமல் கருகச்செய்தது அரபுலகமே என்று இன்றும் மார்தட்டிக்கொள்கிறது, அரபு தேசங்கள்.

ஆம். ஆப்கான் படையெடுப்புத்தான் சோவியத்துகளின் முடிவுக்கு துவக்கமாக இருந்தது. அங்கே முஜாகிதீன்களை வளர்த்ததும், தயார் படுத்தியதும், பொருளாதார பின்புலமாக இருந்ததெல்லாம் அரபு தேசங்களே.

அந்த வரலாற்று வழி வந்தவர்தான் பின் லேடன்.

அப்படியான கம்யூனிச எதிரிகளான அரபிகளோடு காம்ரேடு பினராயி தன் மக்களை காக்க எளிதாக கை குலுக்குகிறார், 'பற்றிய' அந்த கரங்களை வலுசேர்ப்பதோ பூர்ஷ்வா யூசுஃப் அலி.

ஆனால் இங்கோ, எந்த தமிழ் முதலாளிகளும் உருவாகிவிடாது தடுத்து, தமிழர் பணத்தையும், வளத்தையும் கொள்ளையடித்து தமிழர்க்கு எதிராக முதலீடு செய்கிறது ஒரு கும்பல்.

இனத்தின் எதிரிகளோடு கூட்டு சேர்ந்து இனத்தை அழிக்கவும், இனத்தின் வரலாற்று நாயகர்களை கொலை செய்யவும் சதி செய்கிறது.

இந்த தமிழர் மண்ணை தங்கள் வசதிக்கு சுரண்டத்தான் அதற்கு 'பெரியார் மண்' என பெயரிட்டு, நாம் திருடப்படுவதை நம்மையே வணங்கி கொண்டாட வைக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.