24/08/2018

ஆரிய - திராவிட திமுக கலாட்டா...


சொந்தமாக வீடு, கார் இல்லாமல் செத்துப் போன கருணாநிதி என்ற தலைப்பில் இந்து நாளிதழின் செய்தி ஒன்று காணக் கிடைத்தது...

நவீன பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்ரியாவின் மிக முக்கியமான ஒரு ஆய்வு சொல்கிறது ” நவீன மனிதன் இனி போலிகளுக்கும் பொய்மைகளுக்கும் எதிராகவும் போராட வேண்டியிருக்கும்”. அதாவது நிஜத்திற்கும் போலிக்குமான இடைவெளி அருகிவருகிறது.இந்த நிஜத்திற்கும் புனைவிற்குமான இடைவெளியை ஊடகங்கள் மெல்ல மெல்ல அகற்றி வருகின்றன என்கிறார்.

கூடவே,  "இனி உண்மை என்ற ஒன்று இருக்காது.. எல்லோரும் சேர்ந்து கட்டமைப்பதே உண்மை" என்கிறார்.

அதன் உச்ச நிலைதான் கருணாநிதி குறித்த இந்து பத்திரிகையின் இந்த செய்தி.

ஊடகங்கள்,  சிந்தனையாளர்கள், படைப்பாளிகள், இடதுசாரிகள் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் அவரைப் புனிதப்படுத்த தீயாய் வேலை செய்கிறார்கள்.

இந்த லெவல்ல போனால் ஒரு 50 வருடம் கழித்து அவர் சோத்துக்கு சிங்கி அடிச்சு, அநாதையாகச் செத்தார் என்று பாடப் புத்தகத்திலேயே வரும் போல் தெரிகிறது.

ஈழப் போராட்டத்தை தவிர்த்துவிட்டு தமிழக அளவில் மட்டும் வைத்து மதிப்பிட்டால்கூட அவர் போற்றுதலுக்குரியவரல்ல. 50 வருடங்கள் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் அதிலும் குறிப்பாக ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருவர் தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்கு முழுப் பொறுப்பாளியல்லவா?

இதை மறைப்பதனூடாகவும், மறுப்பதனூடாகவும் சாதாரண அடித்தட்டு தமிழக மக்களுக்கு வரலாற்று துரோகம் இழைக்கிறோம் என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்கள்?

ஒரு கொடுங்கோல் , பாசிச ஆட்சியில்கூட  குறிப்பான ஐம்பது ஆண்டுகளில் சில நல்ல விடயங்கள் இயல்பாகவே நடந்திருக்கும். 

அதையெல்லாம் சாதனையாக அடுக்குவதை என்னவென்பது?

அவை கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்பதை இப்போது நடைமுறையில் காண்கிறோம்.

ஆரிய எதிர்ப்பு என்று விட்டு இன்று கருணாநிதி நினைவுரையை நிகழ்த்த இந்து ராம்தான் தேவைப்படுகிறார்.

கூடவே கருணாநிதி சமாதியில் பழம்,பாக்கு, வெற்றிலையுடன் தினமும் முரசொலியும் வைக்கப்படுகிறதாம்.

என்ன கூத்து இது?

இதன் பிறகும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் கருணாநிதி புகழ்பாடி  சாதிக்க விரும்புவது என்ன?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.