குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையானது மிக முக்கியமான சாலையாகும். எப்போதுமே வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். அதனால் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து செல்வதால் போக்குவரத்து நிறைந்து காணப்படும். அப்படி சுற்றுலா பயணிகள் செல்லும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடியும், ஒளிந்தும், விளையாடியும் வரும் குரங்குகளை கவனிக்க தவறுவதே இல்லை.
இந்நிலையில், இன்று குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் குரங்கு ஒன்று இங்கும் அங்கும் ஓடி கொண்டே இருந்தது. அதன் கையில் மற்றொரு குட்டிக்குரங்கு. அந்த குரங்கினை மார்போடு அணைத்துக் கொண்டு வேகவேகமாக ஒரே இடத்தில் சுற்றி சுற்றி வந்தது. சுற்றுலா பயணிகள் இதனை உற்று கவனித்த போது தான் தெரிந்தது குட்டி குரங்கு, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு இறந்தது என்று.
தரதரவென இழுத்து சென்றது தன் குட்டி இறந்ததுகூட தெரியாமல் அந்த தாய் குரங்கு அதனை தூக்கி வைத்து மார்போடு அணைத்து கொண்டே இருந்தது. இந்த பாசப்போட்டத்தினை கண்டு ஏராளமானோர் பிரதான சாலையிலேயே கூடிவிட்டனர். ஆட்கள் நம்மை கவனிக்கிறார்கள், அதிகரித்து விட்டார்கள் என்று தெரிந்து கொண்ட குரங்கு, குட்டியின் உடலை தர, தரவென இழுத்துக் கொண்டு சென்றது.
பின்னர் அங்குள்ள ஒரு புதருக்குள் குட்டியின் உடலை மறைத்து வைத்தது. மீண்டும் சாலைக்கு வந்து இங்கும் அங்குமாய் ஓடியது. தாய் குரங்கின் இந்த செயலை கண்ட வாகன ஓட்டிகள் கண் கலங்கி கிளம்பி சென்றனர். ஆனாலும் அந்த தாய் குரங்கின் அழுகை சத்தம் மட்டும் நீண்ட நேரத்திற்கு நிற்கவே இல்லை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.