23/10/2018

விசிக டூபாக்கூர் திருமாவளவன்...


திருமாவளவன் அவர்களிடம் பெண்களே சபரிமலை விஷயத்தில் போகக்கூடாது என்று போராட்டம் செய்கிறார்களே என்று நியூஸ் 7 ல் கேட்கப்பட்டபோது, அவர் அளித்த பதில்....

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்து சட்ட மசோதா கொண்டுவந்தபோது அப்போதைய மூர்க்க இந்துத்துவவாதிகளான பாலகங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, வல்லபாய் பட்டேல் போன்றோர் எதிர்த்தனர். பெண்களை அணிதிரட்டி எதிர்த்தனர் - என்று பதில் சொல்லியிருக்கிறார்.

1948ல் இந்த மசோதா தாக்கலானது.

1915ல் கோபால கிருஷ்ண கோகலே மறைந்துவிட்டார்.

1920ல் பாலகங்காதரத் திலகர் மறைந்துவிட்டார்.

1915ல், 1920ல் மறைந்த தலைவர்கள் 1948ல் எப்படி அண்ணல் அம்பேத்கரின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியும்?

வரலாற்றை யாரும் சரிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வாய்க்கு வந்தபடி பேசி தன்னுடைய மக்களை, தொண்டர்களை முட்டாளாக்குவது என்று முடிவெடுத்தபின் எப்படி பேசினால் என்ன....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.