23/10/2018

நான் ஏன் பாமக வை ஆதரிக்கிறேன்..?


பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும்...

1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது.

விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்பதான ஒரு சூழல் அது.

அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது.

மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்து, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேல் எல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார்.

இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது.

ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை.

பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா,  பாமக வை  நெருங்க முடியவில்லை...

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

தற்போது புதிதாக உணர்வு வந்து தமிழ் தேசியம் பேசிக் கொண்டிருப்பவர்கள் பலர் அப்போது திமுக - அதிமுக க்கு ஆதரவாக இருந்தவர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.