ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கான கட்டணம் முழுவதுமாக விண்ணப்ப தாரர்கள் தங்கள் இருப்பிடத்தி லிருந்தே செலுத்தும் வசதி அக். 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அக்டோபர் 1 முதல் ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளுக்கான (பழுகுநர் உரிமம், நிரந்தர ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் முகவரி மாற்றம் செய்தல், நகல் ஓட்டுநர் உரிமம் பெறுதல்) கட்டணம் முழுவதுமாக விண்ணப்ப தாரர்கள் தங்கள் இருப்பிடத்தி லிருந்து செயல்படுத்தும் வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேரடியாக parivahan.gov.in/sarathiservicecov6/sarathiHomePublic.do என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்கான தொகையை ஆன்லைனில் மூலம் செலுத்தி பயன் பெறலாம். அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மனுவை பூர்த்தி செய்த பிறகு அதற்கான கட்டணத்தை வங்கி இணைய சேவை மூலமாகவோ, டெபிட் கார்டு அல்லது கிரிடிட் கார்டு மூலமாகவோ, இணையதளம் மூலமாக ரசீதை உருவாக்கி அதை அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு சென்று பணமாகவோ செலுத்தலாம்.
செலுத்திய பின்பு ஒப்புகை சீட்டை அல்லது பணம் கட்டிய ரசீதுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்று தகுந்த சோதனையில் கலந்துகொண்டு புகைப்படம் எடுத்து உரிமத்தை பெற்றுக் கொள்ளலாம்.
இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் அலுவலக த்துக்கு வந்து பணம் செலுத்துவதால் ஏற்படும் காலவிரயமும், பொதுமக்கள் அலுவலகங்களில் காத்திருப்பதும் குறைக்கப்படுகிறது.
மேலும், விண்ணப்பதாரர்கள் இருப்பிடத்திலிருந்தே மனு செய்வதோடு, 24 மணி நேரமும் வங்கி வழியாக பணம் செலுத்தி பயன்பெறலாம்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகப் பணிகள் அனைத்தும் படிப்படியாக ரொக்கமில்லா பரிவர்த்தனை செய்யவும், மற்ற சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.