02/12/2018

முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத்தோட்டத்தில் முருங்கை மரத்தை சாகுபடி செய்திருக்கிறார்...


தினமும் முருங்கை மரத்தை பராமரிக்கிற வேலையையும் காஸ்ட்ரோதான் செய்து வந்தார். அவர் நேசித்த முருங்கைக்கு பின்னால் முக்கியமான சம்பவம் காரணமாக இருகிறது.

கியூபாவிற்குப் பக்கத்து நாடான, ஹைட்டி தீவில் 2010-ம் வருடம் மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. இதனால் லட்சக்கனக்கான மக்கள் பாதிக்கப்பட்டார்கள். பக்கத்து நாட்டில் நடந்த, இந்தத் தகவலைக் கேட்டவுடன் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவர்களையும், தன்னார்வத் தொண்டர்களையும் அனுப்பி உதவி செய்தார். உதவி செய்யச் சென்றவர்கள், உடனே ஒரு செய்தியை அனுப்பினார்கள்.

அந்த செய்தியில் இங்கே பூகம்பம் ஏற்பட்டு அதிகமான மக்கள் இறந்துவிட்டனர். கூடவே காலரா நோய் வேகமாக பரவிக் கொண்டுள்ளது.

இந்த தகவலை கேள்விப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ கியூபாவில் உள்ள மருத்துவத்தலைவரையும், முக்கியமான அதிகாரிகளையும் அழைத்துப் பேசியுள்ளார்.

ஹைட்டி தீவு மக்கள், காலரா நோயிலிருந்து மீண்டு வர என்ன செய்யலாம். இந்த நோய்க்கு என்ன தீர்வு, என்ன மருந்து கொடுக்கலாம் என அந்த கூட்டத்தில் விவாதித்தார்.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட பின்லே இன்ஸ்ட்டியூட் (Finlay Institute) மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர் கெம்பா ஹெர்கோ (Dr.Campa Huergo) ‘ஹைட்டி தீவு மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கக் கூடிய பொருள் இருக்கிறது' என சொல்லியிருக்கிறார்.

அந்த மருந்துப் பொருள் எங்கே இருக்கிறது, எப்படி வாங்கலாம் சொல்லுங்கள் என கேட்டார் ஃபிடல்..

இந்தியாவில் உள்ள முருங்கை இலைக்குத் தான், நோய் எதிர்ப்புச் சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது என்றார், டாக்டர் கெம்பா ஹெர்கோ.

இந்தியா என பெயரை கேட்டவுடனே காஸ்ட்ரோவோட புருவங்கள் விரிய ஆரம்பித்தன.

ஏனெனில் அவருக்கு இந்தியா மேல் எப்போதுமே தனிப் பாசம் உண்டு.

டாக்டர் கெம்பா ஹெர்கோவுக்கும் கூட இந்திய முருங்கை மேல் ஆர்வம் ஏற்பட்டது.

காரணம் பல வருஷமாக யோகா செய்து பலன் அடைந்திருந்தார்கள்.

இந்திய மருத்துவத்தில முருங்கை மரத்திற்கு பெரும் பங்கு இருக்கு..

இதை நம் முன்னோர்கள் எல்லா வழிகளிலும் நமக்கு சொல்லி விட்டார்கள்.. நாம் தான் சாப்பிடவில்லை..

இனி வெளிநாட்டுகாரன் சொல்லிட்டா சாப்டுவாங்க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.