12/12/2018

காவிரிக்காக எந்த பார்ப்பனராவது குரல் கொடுத்துள்ளாரா?


1971ல் காவிரிக்காக முதன்முதலில் வழக்கு தொடுத்தவர் திரு. சீனுவாச ஐயங்கார்.

அவர் வழக்கு தொடுக்க போகும் போது கடைசி நேரத்தில் வந்து ஒட்டிக் கொண்டனர் கருணாநிதி மற்றும் முரசொலி மாறன்.

பிறகு இந்திரா காந்தி மிரட்டியதும் வழக்கை கருணாநிதி வாபஸ் பெற்றனர்.

அதன் பிறகு சீனுவாச ஐயங்காரின் மகன் மன்னார்குடி ரெங்கநாதன் 8.11.1983 ல் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டார்.

அதன் மூலம் 1991ல் (419 TMC தமிழகத்திற்கும் 270 TMC கர்நாடகத்திற்கும் என) கிடைத்த முதல் தீர்ப்பு தான் அடுத்த 11 ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வரக் காரணம்.

காவிரி பிரச்சனை தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில் நாலுவரி எழுதி மீம்ஸ் போட்டுவிட்டு 'ஆண்டாளுக்கு போராடின அவா இதுக்கு வரலை' என்று பார்ப்பனரைத் திட்டும் போராளிகள்,
காவிரிப் பிரச்சனையில் ஆரம்ப கட்டத்திலேயே வெறும் 40 விவசாயிகள் கொண்ட அங்கீகாரமே இல்லாத ஒரு சங்கத்தை வைத்துக் கொண்டு தன் மாநில அரசாங்கம் காலைவாரிய பிறகும் கர்நாடக மாநில அரசுக்கு எதிராக வழக்கு போட்டு நியாயம் வாங்கித் தந்தது ஒரு பார்ப்பனர் என்ற உண்மையை தயவுசெய்து அறிந்து கொள்ளவும்.

நன்றியில்லாத உலகம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.