12/04/2017

சித்தர் ஆவது எப்படி - 9...


இருப்பு நிலையின் பொறுப்பு...

இருப்பு நிலை, இருத்தல் நிலை, பற்றி பேசாத குருக்களே இல்லை.. ஓசோ அதிகமாகவே கூறி இருக்கிறார்.. மற்றும் இன்றைய குருமார்கள் மிக அதிகமாகவே பேசிக் கொண்டு இருக்கிறார்கள்...

இருந்த போதிலும் பஞ்சபூத கூட்டமைப்பில் சில விவரங்களை சொல்ல வேண்டிய அவசியம் ஆகிறது...

மனத்தின் இயல் நிலையே இருப்பு தன்மை தான்... இதுதான் பஞ்சபூத கூட்டமைப்பில் மிக முக்கியமான இரகசியம்..

இந்த இருப்பு தன்மையை மனம் அடைந்த பின்னே தான் எந்த ஆன்மீகம் மார்க்கமும் தொடங்குகிறது.. அதுவரை எதுவும் துளியும் பயன் தராது..

இருப்பு தன்மை அடையாத பட்சத்தில் மனதில் எந்த கடவுள் உருவமும் எந்த யோகப் பலனும் எந்த நிலையான ஞானமும் எந்த திட சிந்தனைகளும் நிலைத்துநிற்க முடியாது..

காரணம் இயல்பாகவே இருப்பு தன்மை வாய்ந்த வெற்றிடத்தில் சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கொடி கட்டி பறக்கும்..

எங்கே எல்லாம் வெற்றிடம் உள்ளதோ அங்கே எல்லாம் எப்படி காற்று புகுந்து கொள்கிறதோ, அப்படியே இருப்பு தன்மை வாய்ந்த சுத்த மனத்தின் வெற்றிடத்தை, எல்லாம் இந்த சித்தத்தின் எண்ண ஆதிக்கம் ஆக்கிரமித்து விடும்..

அப்படியான மனம் சித்த மயமாகி விட்ட நிலையில் சித்தத்தின் பழைய எண்ண பதிவுகளின் ஆதிக்கத்தின் பிரகாரமே இயங்க தொடங்கும்..

எல்லா விலங்குகளும் அப்படியே அப்படி பட்ட மனதின் பிரகாரம் பூரணமாக இயங்குகின்றன...

ஆகவே தான் அவைகள் தங்கள் இயல்பிலிருந்து மாறி மனிதனை போல் வேறு விசேசமான முன்னேற்றம் மனதளவில் எதையும் அடைய முடிவதில்லை..

விலங்குகள் மனதில் சித்தத்தின் உச்ச கட்ட ஆதிக்கம் இருப்பதே இதற்கு காரணம்...

பின் மனிதன் எவ்வாறு வேறு படுகிறான் என்பதை பார்க்க வேண்டும்..

மனிதன் ஏதோ ஒரு வகையில் தன் மனதில் புத்தியின் அம்சமான கனலை, சித்தத்தின் ஆதிக்கத்தையும் மீறி மனதில் கனலை தக்க வைத்துக் கொள்ளும் பண்பை உடையவனாக இருக்கிறான்..

இந்த கனல் தான் சித்தத்தின் ஆதிக்கம் வழி செல்லாமல் தடுத்து நிகழ் காலத்திற்கும், நிகழ் கால நிகழ்வுகளை எதிர் கொள்ள பயன் படுகிறது...

இந்த நிகழ் காலத்தை தொலைத்தவனுக்கு விலங்குகள் போல் எந்த முன்னேற்றமும் காண முடியாது...

நிகழ் காலத்தை சந்திக்க முடியாதவனிடம் கனல் என்ற சக்தியின் குறை பாட்டு தன்மையே அதிகம் இருக்கும்.. சித்தத்தின் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பார்கள்...

கனல் பெருக்கம் பெற்றவர்கள் மட்டுமே நிகழ்கால தொடர்பு பெற முடியும்..

இல்லையேல் சித்தத்தின் எண்ண பதிவுகளின் ஆதிக்கமான இறந்த கால நடப்புகளிலேயே தன் காலத்தை முற்றிலும் தொலைத்து விட்டு வள்ளலாரின் மொழியில் சொன்னால் செத்தாரை போல அதாவது செத்துப் போனவர்களை போல் இருக்க வேண்டியது தான்...

சராசரியாக ஒரு மனிதன் தன் வாழ்நாள் காலத்தை 2 சதவீதம் முதல் 5 சதவீதம் வரைதான் நிகழ்காலத்தில் கழிக்கிறான்.. மீதி நேரம் எல்லாம் இறந்த கால எண்ண ஆதிக்கத்தில் விரையம் ஆகிறது..

நிகழ்கால தொடர்பு என்பது சிவநிலை என்றும், சித்தத்தின் இறந்த கால தொடர்பு என்பது சவநிலை என்றும் சொல்லப் படுகிறது..

நாம் ஒரு நாள் வாழ்க்கையில் எவ்வளவு நேரம் சவநிலை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதை கணக்கிடும் போது நமக்கும் விலங்கிற்கும் அதிக வித்தியாசம் இல்லை..

ஒரு சதவீத வித்தியாசத்தில் மட்டுமே உள்ள நாம் அந்த ஒரு சதவீதத்தால் நாம் எவ்வளவு தூரம் விலங்குவிட மேம்பட்டு இருக்கிறோம் எனபதை கணக்கிட்டு பார்ப்பது மிகவும் அவசியமாகிறது..

அந்த ஒரு சதவீதத்திற்கே இப்படி என்றால் 100 சதவீதம் இருந்தால் எப்படி இருப்போம் என்பதை யூகிக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

இந்த கனலை எவ்வாறு பெறுவது அல்லது பெருக்குவது என்பது தான் யோகம்..

அப்படி பெருக்கும் எந்த யோகமும் பொதுவாக சிவயோகம் என்றே அழைக்கலாம்.. மற்றவை அனைத்தும் சவயோகம்...

கனலை பெறுவதற்கு முன்னால் நாம் மனதளவில் அடைய வேண்டிய ஒன்று தான் மனதில் இருப்பு தன்னம அல்லது இருத்தல் தன்மை.. அந்த இருத்தல், இருப்பில் மட்டுமே கனல் நிற்கும்..

இருப்பு தன்மை பெற்றால் மட்டும் போதாது, அதில் நீடித்து இருக்க வேண்டிய அவசியம் ஆகிறது..

பெற்ற கன்லை சித்தத்தின் எண்ண ஆதிக்கம் கவர்ந்து போகாதவண்ணம் பாது காப்பதும் அதை விட அவசியம் ஆகிறது..

சும்மா வந்து விடாது சுதந்திரம் என்பார்களே அது போல் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்திலிருந்து, சவநிலையிலிருந்து, மீண்டு சிவ நிலைக்கு சுதந்திரமாய் வருவதற்கு ஆரம்பத்தில் மனம் என்ற நெருப்பில் பயின்றால் மட்டுமே முடியும்..

அந்த இருப்பு தன்மையை தக்க வைக்கும் பொழுது பேரண்ட பேராற்றல் கனலாக புத்தியில் நிலைகொண்டு, இருப்பு தன்மையால் மனதை கனலாக மாற்றி, சிவகலப்பாக மாற்றும் பொழுது, மனதில் மோதும் சித்தமும் சிவமாகி போகிறது..

அப்படி சித்தம் எல்லாம் சிவமாகி நின்ற நிலையில் தான் குறைந்த சதவீத கனல் நிலை அதிக சதவீதம் பெருக்கம் அடைந்து மனிதன் மேன்மை நிலை நோக்கி விரைவு கொள்கிறான்..

அந்த நிலையான இருப்பு நிலை பெறுவதற்கான பயிற்சிதான் சித்தர்கள் கண்ட வாசியோகமும் கனல் தீட்சையும்...

இருப்பு தன்மை பெறாத வாசியோகம் நாசம் விளைவிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.