10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 4...


வள்ளலாரின் ஆறாம் திருமுறையில்...

வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் சொல்லப்பட்டக் கருத்துகள் அனைத்தும் இறுதிகாலத்தில் வரும் புதிய தமிழ் திருச்சபைக்கு கூறியது.

இக்கருத்துகள் அவர் வாழ்ந்த காலத்துத் திருச்சபைக்குத் தொடர்பில்லாதது. அதனால்தான் தன் மக்களையும் எதிர்காலத்தில் இறுதி திருச்சபையை நோக்கி செல்க என்று கூறிவிடுகிறார். ஒட்டுமொத்தமாக உற்று நோக்கி பார்த்தால் அவருடைய ஆறாம் திருமுறை கீழ்க்கண்ட விஷயங்களை கோடிட்டு வலியுறுத்தி நிற்கின்றன..
           
(1) இறுதிகாலசபை, அதுவே இறைத்திருச்சபை. அதுவே தமிழ்திருச்சபை.  ஒரே ஒரு திருச்சபை மட்டும் கொண்டது. ஒன்றுக்கு மேற்பட்ட பல சபைகளை கொண்டத் திருச்சபை அல்ல. தமிழ்நாட்டிலே இந்த தமிழ்த் திருச்சபை இறை திருச்சபையாய் விளங்கப்போகிறது.
                             
(2) அந்த இறுதி திருச்சபையில் ஒரு விமலன் இருப்பார். 

(3)  அவர் அண்டமே பிண்டம் என்ற அற்புத புதுஞானத்தை புகற்றி நிற்பார்.

(4) இறந்தோரை மீண்டும் உயிரோடு எழுப்பும் திருச்சபையாக அது மாறும்.

(5) நீதிபரிபாலனம் என்னும் நியாயத்தீர்ப்பை செய்து நிற்கும்.

(6) மூப்பு, பிணி , ஊனம், மரணம் இவைகளை பூமியில் ஒழித்து நிற்கும்.     
(7) ஏகாதிபத்திய இறைக்கொள்கையை பூமியில் நிலைநாட்டி நிற்கும்.

(8) செங்கோல் கொண்டு சிறப்புற இப்புவியை ஆண்டு நிற்கும்.

(9) அமரத்துவம் கொண்ட அமுதை உண்டு நிற்கும் தேவசபையாக மாறும்.

(10) இந்த மானுட திருச்சபை மரணமில்லா பெருவாழ்வு கண்டு நிற்கும்.

(11) இறைநகரை பூமியிலே இறக்கி நிற்கும்.பசும் பொன்னால் வேயப்பட்ட கூறைகளை கொண்ட மாளிகைகளை அடைந்து நிற்கும். பன்னிரண்டு வகையான இரத்தின கற்களை கொண்ட மாளிகைகளாக அவை திகழ்ந்து நிற்கும்.

(12) இறுதியில் அந்த சபையில் அமர்ந்திருக்கும் விமலன் இறை அந்தஸ்த்திற்கு உயர்த்தப்பட்டு இறைவனுக்கு ஒத்தவரய் இருக்கச் செய்யும். ஆனால் இறைவன் ஒருவனே எல்லாம் வல்லவன் என்ற கோட்பாட்டை நிலைநிறுத்தும்.

இதுகாறும் கண்ட பாடல்களில் இறைவனின் இறுதி திருச்சபை செய்யும் பல அற்புதங்களில் இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று எழுகிறார்கள் என்ற உண்மையை பூமிக்கு அறிவித்து நிற்கும் வள்ளலாரின் ஆறாம் திருமுறை அழகுபட வர்ணித்து நிற்கிறது வல்லமையாய் என சொல்லிவிட்டு,

அடுத்து இதேக் கருத்தை வலியுறுத்தும் தமிழ் "ஓடம் "தீர்க்கத்தரிசி புவிக்கு என்ன சொல்கிறார், இதைப்பற்றி என்ற கருத்தில் ஆராய்வோம்.

"பஞ்சமி போனபின் பாரு இந்த பாலிடப் பாலிகை விட்டப்பின் பாரு"

"விட்டதும் குறையும் என்றான்டி_அந்த விபரீத சாலையில் விளம்புவேன் என்றான்டி"                                     

"கட்டியம் கூறச்சொன்னான்டி _அந்த காட்சியின் கன்னியை (அழிவை) காட்டுவேன் என்றான்டி " 
                         
"அந்த விபரீத படலத்தை விரிப்பேன் என்றான்டி விந்தைகள் நடக்கும் என்றான்டி "       
                     
"சந்திர சூரியரை சேரச்செய்வான்டி_முட்டியே போச்சு என்றான்டி. மும்மூர்த்தியுடனே திரும்ப வருவேன் என்றான்டி"

"தட்டியே எழுப்பச் சொன்னான்டி_அந்த தாட்டிக வேலரை காட்டுவேன் என்றான்டி"                                   
   
"சித்திரம் முடிக்கப் போறான்டி_அந்த சிற்சத்தி சோலைக்கு திரும்ப வாறான்டி"                                                         
"உற்றது சொல்லமாட்டான்டி_அந்த ஊர்தண்ய முகமாய் திரும்ப போறான்டி"                                                   
"குமரனார் வந்துதான் குறிப்புகள் காட்ட ரூபத்தைக் காட்டியே ரூபம் இல்லார்க்கும் "                                         
"பதியோனின் வானவர்கள் வந்திறங்கும் வற்றாத அருள் தோணி"

"கோன் அமரும் குமரர் அவர் கொண்டு வரும் வாக்குகளை சொன்ன வழி சாற்றினன் காண் இத்துறையில்"

என்ற இவருடைய தீர்க்கத்தரிசன பாடல்களில் இறந்தோரை எழுப்புகின்ற சம்பந்தப்பட்ட வரிகளை மட்டும் எடுத்து தந்திருக்கின்றோம்.

இவர் வடலூர் வள்ளலார் சொன்னது போல் செத்தாரை எழுப்பும் திருநாள் ஒருநாள் இறுதியில் வரும் தமிழ் திருச்சபைக்கு குறிப்பிட்டது போல் இவர் வலுவாக அற்புதமாக ஆணித்தரமாக உரைக்கின்ற காட்சிகள் இறுதி திருச்சபையில் முக்கியமானவர்கள் எப்படி இறக்கிறார்கள் எதனால் இறக்கிறார்கள் எங்கே இறக்கிறார்கள் என்ற விவரத்தை துல்லியமாய் காட்டி நிற்க , அது விபத்து என நம்மால் உணரமுடிகிறது.

இப்படி இறந்து போனவர்கள் எழுந்து வந்து அதே திருச்சபையில் அதிசயமாய் எழுப்பப்பட்டு நிற்பதை கூறுகின்ற அதே நேரத்தில் எழுப்பப்படுபவர்களில் ஒருவர் வள்ளலார் குறிப்பிடும் விமலனின் குமாரர் என்று குறிப்பிட்ட வார்த்தையிலிருந்தே மகன் என எண்ணத் தோன்றுகிறது.

அவரே ஊர்தண்யமுகமாய் ஊர்த்துவமுகமாய் வானவெளியில்  மேகத்தினிடையே நிற்பதை சுட்டிக் காட்டுகிறார்.

அது மட்டுமல்ல, இறுதியில் வரும் இறையரசில் இடம்பெற போகும் மூன்றாம் நபர் முக்கியமானவர் என எண்ணத் தோன்றுகிறது.

திரித்துவம் கொண்டு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உலகை ஓர் ஆட்சி முறையில் ஏகாதிபத்திய இறைகொள்கையில் நடத்தப்படும் என்ற கருத்தை ஓடம் தீர்க்கதரிசி உன்னதமாய் வள்ளலாரை போலவே சத்தியம் செய்கிறார்.

வள்ளலாரைப் போலவே இவரும் "பண்டைய வேதங்கள் பறந்துமே ஓட" எனச் சொல்லி உலகில் புதிய சன்மார்க்கமாய் அந்த திருச்சபையாகிய சன்மார்க்கம்சபை  ஈடு இணையற்றதாய் இருக்கப் போகிறது என்பதை அரிதியிட்டு கூறுகிறார்.

அந்த தீர்க்கதரிசியின் ஏனையப் பாடல்களை ஆய்ந்து பார்க்கின்றபோது வள்ளலார் கூறும் விதமாய், காலம் கனிந்தது. கருத்து வென்றது என்ற நிலைப்பாட்டில் இவருடைய கூற்றுகளும் அக்காலம் இக்காலமாய் எக்காலத்திற்கும் உயர்ந்த நிலையிலே இருக்கும் காலமாய் இருக்கும் காலம் இதோ வந்துவிட்டது என சொல்லத் தோன்றுகிறது...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.