10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 6...


எனவே இவ்விஷயங்களை பேசும் போது உண்மை நிலையை உணரும்போது இது போன்ற சந்தர்ப்பவாதிகளை மறந்து விடுங்கள். தான் பணம் சம்பாதிக்க ஏதுவாய் இருந்தால் தன் தத்துவங்களையும் கொள்கைகளையும் தாரைவார்க்கும் பொய் வேஷதாரிகளை விட்டுவிடுங்கள் . வீணர்களை பற்றி பேசி நேரத்தை வீணடிக்காமல் விஷயத்திற்கு வருவோம்.

இப்படி அறிவியல் மேன்மையைப் படித்து உணர்ந்த டாக்டர் தொழில் செய்த நோஸ்ட்ராடமஸ் தனக்கு தீர்க்கதரிசனம் காணும்  வரமாய் ஞானம் பெற்றபோது மருத்துவத்தால் சாதிக்க முடியாததை இயலாததை செய்து காண்பிக்கும் வல்லமை   Almighty GOD எனும் இறைவனின் அற்புதம் 21-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிகழுகின்றபோது ஆச்சரியமும் அதிசயமும் நடப்பது மட்டுமல்ல, தான் ஒரு கிருஸ்த்துவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவர் செத்தாரை எழுப்புகின்ற நாள் வந்தால் கிருஸ்த்துவத்தை வைத்து காலத்தை கணிக்கின்ற முறைமாறி வேறொரு இறைமுறைக்கு மச்ச ஆண்டுக்கு உலகம் மாறுகிறது.

எனவே கி.மு கி.பி என்ற வார்த்தைகள் பொருளற்றுப் போகின்றன.

இப்படிபட்டவர் ஆசிய தென்கண்டத்திலே தென்னிந்தியாவிலே மூன்று கடல் சூழ்ந்த பகுதியிலே ஒரு மதத்தின் பெயரை கொண்ட அதாவது இந்து மகாசமுத்திரம் கொண்ட பகுதி இச்சிறப்புக்குறியதாய் இருக்கிறது என்று சொல்வதிலிருந்தும் அவ்வூர் கடற்கரை சார்ந்த ஊராய் வங்ககடலை சார்ந்து சங்கமிட்டு இருப்பதை சொல்லிநிற்கிறார்.

வள்ளலாரும் ஓடம் "தீர்க்கதரிசியும்"  இப்படிச் செத்தாரை எழுப்பும் தமிழ் திருச்சபை தமிழ்நாட்டில் தோன்றும்எனச் சொல்லியிருப்பதை இவர் கருத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். 

இதே இறந்தோரை எழுப்பும் கருத்தை சென்சுரி-2 வில் பாடல்-13 அதிலே  இறுதியில்இறைவன் உள்ள சபையை பற்றி சொல்லும் நேரத்தில் ஒரு இறப்பை குறித்து சொல்வதும் இறைவன் மீண்டும் உயிரோடு எழுப்பிநிற்பதும் அவருக்கு அளவில்லா வளமான வாழ்க்கையை சந்தோஷமாய் வாழக் கொடுப்பதும் இனி மரணமில்லா பெருவாழ்வை இறைவன் அவருக்கு அளிக்கிறார் என்று கூறுவதும் மேற்கண்ட தீர்க்கத்தரிசிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்குகிறது அல்லவா.

அதை அடுத்து தமிழ் தீர்க்கதரிசி முத்துக்குட்டி அவரின் திவ்ய தீர்க்கதரிசனத்தில் "அருள்நூலிலும்" "அகிலத்திரட்டிலும் " இறுதி காலத்தில் இயக்கம் பெறப்போகும் இறுதிசபையை பற்றி தயக்கமில்லாமல் சொல்லி செல்கிறார்.

அருள்நூலில் "ஒரு சாம நேரத்தில் ஊழியென்ற காற்று வரும் மற்புடைய பிள்ளைகளே வருவேன் நான் எழுப்புதற்கு"   "அம்புவியைத் தான் எரிக்க அய்யாவும் செத்த சனத்தையெல்லாம் சீக்கிரத்திலே தான் எழுப்பி நாற்பது நாள் நியாயவழிகாட்டி " " கொஞ்சும் கிளியே  கொன்று எழுப்புவேன் உனையும் " "மூங்கில் கலி விட்டகன்று முழித்து குதித்து உதித்து........ "மாளுவது மாண்டு பின் மனதுக்குவந்ததே முழிக்கும்" வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் எனவும் , அது நற்சேத்திரத்தில் குதித்துக்கொள்ளும் எனவும், "கம்புகொண்டு தான் அளந்து கண்மணியே வெட்டச் சொன்னான்  பரிக்க நான் வந்தேனடா பத்தினியும் கூடவந்தாள் " உடல் அழிந்து விழுகுதடா வீட்டோடு வேகுதட "சுழற்காற்று வருகுதப்ப தேசம் விட்டு சனம் ஒடுதடா மண்ணறைக்குள் இருக்கும் மாயாண்டி வெளிவருவேன் அம்புவியை அரசாள வரும்போது சம்பூர்ணதேவரை தான் எழுப்ப அய்யாவும்" இப்படி பல்வேறு இடங்களை பகுத்துணர்ந்து பார்த்தால் முத்துக்குட்டியின் தீர்க்கதரிசனத்தில் இறந்தோர் எழுப்பப்படுதலைப் பற்றி கூறிப்பிடுவதும் அதுவும்முதலில் இறுதிகாலத்தில் வரும் திருச்சபையில் இறந்தோரை எழப்புதல் தொடங்குகிறது என்றும், இறந்து எழுப்பப்படுபவர் உறவு முறைபற்றியும் தெளிவாக குறிபிட்டிருப்பதை காணமுடிகிறது.

இதே இறந்தோர் எழுப்புதலை பற்றி குரானிலும் நபி அவர்கள் கூறுகின்ற போது இறைவன் முன் நிற்கும் நாள் கியாமத்நாள் மறுமைநாள் என்ற தலைப்பில் எழுதியுள்ள சொற்றொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இறந்தோரை சாம்பலில் இருந்து எழுப்பப்பட மாட்டோம் என்று நினைக்கிறானா அவன். அவன் விரல் நுனியிலிருந்து சரிசெய்து எழுப்புவோம். இறந்தோரை எழுப்பும் ஆற்றல் உடையவன் இறைவன்.

மண்ணறைக்குள்ளிலிருந்து வெளி வருவார்கள். கல்லறைக் குள்ளிலிருந்து எழுவார்கள். மரணித்தவர்கள் எழுப்பப்படுவார்கள்.

என இதுபோன்ற இறந்தோரை எழுப்புதல் பற்றி நிறைய இடங்களில் திரும்ப திரும்ப சத்தியம் செய்து இறைவனின் வல்லமையை வெளிபடுத்தி நிற்கிறார்.

இறுதி இறையாளனுக்கு இறந்த மகனை எழுப்பும் நிலை வரும் என ஹதிஸ்களில் சொல்லியிருப்பதையும் ஒட்டு மொத்தமாய் ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது குரானின் பல வசனங்கள் இறைவன் நியாயத்தீர்ப்பு செய்யும் நாள் இறந்தோர் எழுப்பப்படும் நாள் ஒன்று திரட்டப்படும் நாள் மறுமைநாள் என்றெல்லாம் மிக மிக முக்கியத்துவம் கொடுத்து பேசும்போது இந்த நாள் எதைவைத்து துவங்குகிறது என்றால் இறந்தோர் எழுப்பப்படும் நாளை குறித்து நிற்கிறது என திண்ணமாக சொல்வதை பார்க்கின்றபோது   வள்ளலாரும்   ஒடம் தீர்க்கதரிசிபிரஞ்சு தீர்க்கத்தரிசி முத்துக்குட்டி தீர்க்கதரிசி இவர்களின் தீர்க்க தரிசனங்களும் நபி தீர்க்க தரிசனங்களோடு ஒத்துப்போய் இருப்பதை காண்கிறோம்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.