10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 7...


அடுத்து இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய தீர்க்கதரிசனம் கிருஸ்த்துவ மார்க்க பைபிளில் புதிய ஏற்பாட்டில்பல இடங்களில் காணப்படுகின்றன.

இறுதி காலம் எப்பொழுது எனக் கேட்டு நிற்கும் நேரத்தில் இயேசுவே தானியேல் தீர்க்கத்தரிசி சொன்னானே அந்த நடுங்கவைக்கும் தீட்டு இறுதி சபையில் நடந்தேரும் நாளை எதிர்பாருங்கள் என்று வலியுறுத்தி சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள்.

இறுதிசபை தானியேல் கூற்றுப்படியும் திருவெளிப்பாடு யோவான் கூற்றுப்படியும் இறுதிசபை தன் பதியை எழுப்பி மூன்றரை வருடங்களுக்கு பின் நடுங்கவைக்கும் தீட்டு நடப்பதை அறிவிக்கிறார்.

இப்படி திருச்சபையின் இரகசிய வருகை பூமியிலே வந்துநிற்கும் பதியிலே வந்துநிற்கும் காலத்திற்கு பிறகு "ஓடம்" தீர்க்கதரிசி சொன்னமாதிரி யோவானும் திருவெளிப்பாடு புத்தகத்தில் (அத்தியாயம் _11) இல் ஒரு சாலையிலே பாதாளத்திலிருந்து எழுகின்ற மிருகம் திருச்சபையின் சாட்சிகளைக் கொன்றுபோடும் எனச் சொல்லியக் கருத்துகள் மிகவும் ஒத்துப்போகின்றன.

இந்த இருவரின் கருத்துகளும் சூரிய சந்திர கிரணங்களின் சேர்க்கை தொடர்ச்சியாக நடைபெறும் நேரத்தில் 21-ம் நூற்றாண்டின் துவக்கத்தில் நோஸ்ட்ராடமஸின் கூற்றுப்படி ஏழு ஏழு ஆண்டுகள் சுழுற்சியின் தொடக்கப்படி சுட்டிக்காட்டி நிற்கும் இந்த சம்பவம் மூவரின் ஒட்டுமொத்த கருத்துகளும் ஒருவழியாய் சிந்தித்து பார்த்தால் 21-ம் நூற்றாண்டில் இவர்கள் கூறிய மாதிரி வந்துபோன நான்கு சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் கொண்ட டெட்ராய்டு அமைப்பில் சிவப்பு ரத்த சந்திரனின் காலம் கடந்து நாம் நிற்கிறோம்.

முத்துக்குட்டி தீர்க்கதரிசனத்தில் ஆறுவருட மொத்த தவக்காலத்தில் கடைசி இரண்டு வருடங்களில் நடுங்கவைக்கும் தீட்டு நடந்தேறும் எனச்சொல்லி இருப்பதை சோக நிகழ்வாக இருந்தாலும் சுட்டிகாட்டி இருப்பதை பார்க்கும்போது அந்தகாலம் நெருங்குகிறது தற்போது என எண்ணத்தோன்றுகிறது.

ஆறாண்டு கால தவவாழ்க்கைக்கு பிறகு ஏழாம் வருட துவக்கம் பெற்று நின்றால் உவக்கம் பெற்று நிற்கும் நிலையில் கடைசி இரண்டாண்டு கழித்து   இன்பமுறும் காலம் இனிதே வந்து சேரும் என்ற கூற்றுப்படியும்  யோவான் திருவெளிப்பாடு தீர்க்கதரிசனத்தில் அத்தியாயம்_11இல் சபையின் சாட்சிகளை இறுதியில் வந்தமையும் மூன்றரை நாட்களுக்கு பிறகு இறந்தவர்களை மீண்டும் உயிரோடு எழுப்பும் காட்சிகள் அரங்கேற்றம் ஆவதை சுட்டிக்காட்டியிருப்பதை சிந்தனையால் எட்டிப்பிடியுங்கள்.

இக்கருத்தையே வலியுறுத்தும் தமிழ் தீர்க்கதரிசியும் மூன்று நாள்களுக்கு பிறகு எனச்சொல்லும் பாடலை பகுத்துணர்ந்தபோது கருத்து ஒன்றெனத் தோன்றுகிறது.

பழைய ஏற்பாட்டில் யோபு ஆமோஸ் ஆகியோர்கள் பேரண்டத்தில் இறுதிக்காட்சிக்கு முக்கிய அடையாளமாக மூன்று நட்சத்திரங்களை வானத்தில் இறைவன் வைத்திருக்கிறார் என கூறியதைப் பார்க்கும்போது கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், இந்த மூன்று நட்சத்திரங்களும் முக்கிய மூன்று நாட்களுக்கு உரியது என முன்மொழிந்து நிற்க வேண்டியிருக்கிறது.

யோவானின் திருவெளிப்பாடு தீர்க்கத்தரிசனத்தில் தமிழ் தீர்க்கதரிசி முத்துக்குட்டி, தமிழ் ஓடம் தீர்க்கத்தரிசி, வள்ளலார், நோஸ்ட்ராடமஸ், நபிகள் நாயகம் கண்ட எழுப்புதலை ஒத்துப்போகும் வகையில் இறந்தவர்களில் அச்சபையில் எழுப்பப்பட்டவர்களில் சிலர் அரியணை மீது அமர்ந்திருக்கக் கண்டேன் என்று சொல்லுவதும்.

தானியேல் தீர்க்கத்தரிசி இறந்தவர்கள் மீட்புப்பெற்று நட்சத்திர அந்தஸ்த்தில் பூமியில் ஒளிவீசி திகழ்கிறார்கள் என்று சொன்னதும் இறந்தவர்கள் எழுப்பப்படுவது உறுதி எனத்தெரிகிறது அல்லவா.

இந்த நிகழ்வுகளுக்கான தொடக்கம் வானத்தில் குரு கடகராசியில் வந்து நிற்கின்ற போது தொடங்க ஆரம்பிக்கும் என்று சொன்ன பார்சீமுனிவர் பேரண்டத்தையே தன் காஸ்மிக் பவரால் ஆட்டிபடைக்கும் அற்புதரை இந்த உலகம் காணப்போகிறது என்று சொன்னதிலிருந்தும் காலம் சரியாகா இருக்கிறது என எண்ணத்தோன்றுகிறது.

இயேசுவிடன் இறைராஜ்ஜியம் எப்போது துவங்கும் எனகேட்டு நிற்கின்ற போது அவர் அளித்த பதில் என்னுடைய ரத்தத்தை பானம்பண்ணியவனும் என்னுடைய சதையை புசித்தவனும் ஆகிய ஒருவனை நான் எழுப்பாத வரை இறைராஜ்ஜியம் வராது என்று சொன்னதிலிருந்தே தமிழ் சித்தர்கள் முனிவர்கள் தெளிவாய் தீர்க்கத் திரிசனத்தில் குறிப்பிட்டு நிற்கும் இந்த இறந்தவர்களை எழுப்புதல் படலம் இனிதே அரங்கேற்றம் ஆவதே யுகமாற்றத்தின் முதல் அறிகுறி என தெளிவாய் தெரிகிறது.

பவுல் அடிகளார் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகங்களில் எழுப்புதலுக்கான கருத்துக்களை ஆழமாக பதித்திருக்கிறார்.

போகரும் தன் சீடர் கோரக்கரிடம் இறுதி நாளில் வந்து இப்படிபட்ட அற்புதங்களை செய்து சித்தாராட்சி என்னும் இறையரசையும் அமைப்போம் என சொன்னதிலிருந்தும் இக்காட்சி இன்னும் வலுசேர்க்கப்பட்டு நிற்கிறது.

ஒருவன் ஞானம் பெறுகிறான் என்றால் ஞானபெறும் நேரத்தில் முத்துக்குட்டி முகமன் கூறிநிற்கும் விதமாய் ஞானம் பெறுபவரின் காதில் குயில் சத்தம் கேட்பதுபோல் இருக்கும் ஆன்ம உள்ளுணர்வில் மயில் தோகைவிரித்து சிலிர்த்து ஆடுகின்ற காட்சிபோல் ஆன்மநிலை உயரும்.

இப்படி தீர்க்கத்தரிசன காட்சியில் ஆடியோ வீடியோ அமைப்பு அவர்களுக்கு கிடைப்பதற்கு இவற்றை உதாரணப்படுத்தி நிற்கும் நேரத்தில் இறுதி காட்சியில் இடம் பெறும் இறைசபையின் விமலனின் காதுகளில் பேரண்டம் குயிலின் சத்தத்தை தினம் கூவிக் கொண்டு இருப்பதை காணமுடியும் எனவலுவான கருத்தை வல்லமயாய் சொல்லி நிற்கிறார்கள்.

எனவே குயிலும் மயிலும் முல்லையும் குறிஞ்சியும் சார்ந்த பகுதிகளில் அதிகம் வசித்திருக்கும்.

இடம் பெயரும் இவைகள் மருதம் நெய்தலுக்கு வந்து நிற்கும் காலமாய் மாறிபோகும் கற்பக விருட்சம் எனும் புன்னை மர தத்துவத்தில் பூத்து நிற்கும் கருவாலி கற்பக விருட்ச தத்துவம் குயிலையும் மயிலையும் கூப்பிட்டு நிற்கும் என்ற கோட்பாட்டின் படி அதிகமான குயில்களும் மயில்களும் இடம் பெயர்ந்து இறைசபையை நோக்கி இறைசபை உள்ள ஊரை சுற்றியுள்ள இடங்களில் தஞ்சம் புகுந்து அவை தீர்க்கதரிசிகளின் திவ்ய காட்சிகளை திடமாய் செப்பிநிற்க தடமாய் அமைந்த ஜடமாய் இருந்ததை எழுப்ப சித்தம் கொள்ளும் காலமாய் காட்டி நிற்க காலம் துணைச் செய்து நிற்கும்.

எழுப்பும் நாள் வந்துவிட்டால் குயில்கள் அந்த இறுதி விமலனின் காதுகளில் கூவுதலைக் தினம் கொண்டிருக்கும் எனத் தோன்றுகிறது...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.