10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 8...


இப்படி எல்லாத் தீர்க்கத்தரசிகளும் இறந்தவர்களை எழுப்புதலை பற்றி இதமாய் பதமாய் இறக்கி வைத்தாளும் ஆந்திராவிலே தோன்றிய பிரம்மங்காரு தன் தீர்க்கத்தரிசனத்தில் தமிழ்நாட்டில் காமதேனு தோன்றும் அது உலகத்தை ஒராட்சி முறைக்கு உட்படுத்தும் என்று சொன்ன அவர் கருத்தை வெளியிட்டவர்கள் இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய தீர்க்கத்தரிசனத்தை ஏன் வெளியிடவில்லை என சிந்திக்க தோன்றுகிறது..

நிச்சயமாக எழுப்புதல் பற்றிய பலவிஷயங்கள் அந்த தீர்க்க தரிசனத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

இறந்தவர்கள் எழுப்படுபவர் என்றக் கோட்பாட்டில் மானுட தன்மையில் நின்று மனதளவில் பார்ப்பவர்கள் இது சாத்தியப்படாது என்று தனக்குத்தானே முடிவெடுத்து அவ்வரிகளை தாண்டி சென்றிருக்க வேண்டும்..

இக்கட்டுரையின் மூலம் இறந்தவர்கள் எழுப்பப்படுதல் நிச்சயம் என வலியுறுத்துவதால் தமிழும் தெலுங்கும் நன்கு தெரிந்தவர்கள் அவைகளை பார்த்து உணர்ந்து எழுப்புதல் பற்றிய செய்திகளை எங்களுக்கு தெரிவித்தால் இக்கட்டுரையிலே பிரம்மாங்காருவின் மணம் வீசும் பகுதிகளை இங்கே சேர்த்து விடுவோம்.

 அடுத்து இதுகாறும் பல தீர்க்கத் தரிசிகளின் தீர்க்கத் தரிசனத்தை உற்று நோக்கிய நிலையில் மாயன் நாகரீக கோட்பாட்டில் காட்டிநிற்கும் இறந்தவர்களை எழுப்புதல் பற்றிய அதிலும் குறிப்பாக இறுதிசபையில் இருசாட்சிகள் எழுப்பப்படுவதை சித்திரமாய் வரைந்து சொல்லப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனத்தை காணும் போது வியப்பாய் தான் இருக்கிறது.

ஆஸ்த்திக மார்க்கம் ஆன்மீக மார்க்கமாய் அழகுப்பட அடி எடுத்து வைத்த நிலையில் தடம்புரள தடுமாறி கண்டபாதை இந்தியாவிலே புராணப்பாதையாய் மாறி போனது .

இந்த புராணக் கதைகளில் கூட எழுப்புதல் இடம் பெற்றிருக்கிறது கோரக்கர் ஆன்மா மச்சமுனியால் சாம்பலிருந்து எழுப்பப்பட்டவர்.

சைவத்தில் திருஞானசம்பந்தரால் சாம்பலில் இருந்து எழுப்பப்பட்ட பூம்பாவை.

மட்டிட்ட புன்னை என்ற பதிகம் பாடி பெண்ணுருவாக்கியதாய் சொல்லிநிற்கும் இடத்தை கவனிக்கின்ற போது மயில் உருவத்தில் பூஜை நடந்த இடம் புன்னை மரத்தடி கலசத்தில் சாம்பல் இவற்றை கொண்டு இருக்கும் இடத்தில் எழுப்புதல் நடைபெற்றதாய் புராணத்தில் கூட எழுப்புதல் சொல்லப்பட்டிருக்கிறது.

மன்மதனை எரித்து பின் எழுப்பும்  புராணமும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்து  எழுப்பப்பட்ட சீராளன் புராணம்.

புராணத்தில் கூட இத் தத்துவம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை சொன்னேன்.

ஆனால்  புராணத்தை விடுங்கள்.

உங்களுக்கு புராணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. இந்த புராணங்கள் தீர்க்க தரிசனதத் தத்துவத்தோடு கதை யாய் மாறிப்போனது.

புராணக் கதைகளை விட்டுவிட்டு சத்திய வார்த்தைகளாக  இத்தனை தீர்க்கத்தரிசிகளும் திடமாய் செப்பிவைத்த அரிய சத்திய வாக்குகளை உங்கள்முன் வைத்துள்ளேன்.

எழுப்புதல் என்ற அளவில் இயேசுவின் காலத்திற்கு சென்றால் அவர் காலத்தில் அவரும் அவரை சார்ந்தவர்களும் மூன்று எழுப்புதல்களை செய்ததாக சொல்லப்படுகிறது.

தன்னைத்தானே எழுப்பி சென்றதாயும் சொல்லப்படுகிறது. இறந்த பிறகு ஐந்தாம் நாள் சென்று லாசரை எழுப்பி தன்பக்கத்தில் வைத்துக்கொண்ட வரலாறும் எல்லோர்க்கும் தெரியும்.

அப்படி என்றால் இதுவரை இந்த பூமியிலே வந்து போன இறைத்தூதர்கள், சித்தர்கள் முனிவர்கள் இறந்தவர்களை எழுப்பி நின்றதற்கும் இறுதி காலத்தில் இறைவன் பூமிக்கு வந்து எழுப்புதலை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்.

இரண்டும் ஒன்றே என்றால் இறைவனின் மகத்துவம் எங்ஙனம் உணரமுடியும்.

ஒன்றை நன்றாக தெளிவாக புரிந்துக் கொள்ளுங்கள்..

ஏனைய எழுப்புதல்கள் உடலை சார்ந்த விஷயமாய் இருக்கிறது. அந்த உடல் முழுமையாய் இருந்தால் ஒழிய எழுப்புதல் என்பது சாத்தியம் இல்லை. சாம்பலாவது வேண்டும்.

ஆனால் இறைவன் வருகையில் எழுப்பப்படும் எழுப்புதல் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னே இறந்து போயிருந்தாலும் துக்கத்தில் பரிதவிக்கும் துன்புற்று நோவோர்க்கு எழுப்பித்தரும் ஆற்றல் இறைவன் ஒருவருக்கே.

இயேசுவை இந்த பூமியிலே அடையாளம் காட்டியவர் அவரில் சிறப்பாக வர்ணிக்கப்பட்ட திருமுழுக்கு யோவான் ஆவார் அவரே இறுதி சபையில் இறை அரசை வழி நடத்தும் முக்கிய பொறுப்பிலிருக்கும் சிறியவரும் முதன்மையானவரும் ஆவார்.

இப்படி மானுடமகன் அந்தஸ்த்தில் நிற்கின்ற  இவருடைய ஆன்மா இயேசு காலத்தில் திருமுழுக்கு யோவானாக இயேசுவிற்கு சில மாதங்கள் மூத்தவராக வந்துநின்றவர்.

இயேசுவை அடையாளம் காட்டி தேவ ஆட்டுக்குட்டி என தெரிந்து சொன்னாலும் திருமுழுக்கு யோவான்  ஏரோது மன்னனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் சிரைசேதம் செய்யப்பட்டு சபையிலே தலையை ஒருவருக்கு பரிசாய் கொடுக்க நின்ற நிலையை சொல்லக்கேட்ட இயேசு அவரை எழுப்பவில்லை ஏன்?

எழுப்புகின்ற முயற்சியில் ஈடுபடுவதற்கு மாறாக அவ்வூரைவிட்டு புறப்பட்டு பிரிதொரு ஊருக்கு போனதை சிந்தித்துப் பாருங்கள்.

எனவே எழுப்புதலுக்கு உடல் எனும்  ஊடகம் தேவைப்படுகிறது. ஆனால் இறைவன் பூமியில் வந்து எழுப்புவதற்கு எதுவும் தேவையில்லை.

யார் எதைக்கேட்டாலும் எத்தனை வருடத்திற்கு முன் இறந்திருந்தாலும் அவர்கள் காரணம் கூறி கேட்பது தர்மமானால் நினைத்த மாத்திரத்திலே எழுப்பி கொடுக்கும் வல்லமை இறைவன் ஒருவருக்கே.

எனவே இப்படிபட்ட எழுப்புதலை அனைத்து தீர்க்கத்தரிசிகளும் வல்லமையாய் இறுதிசபை மூலமாய் அரங்கேற்றம் ஆகிறது என்பதை உணரமுடிகின்ற போது இந்த இறுதி திருச்சபை இதுவரை பூமியில் வந்த எந்த மார்க்கத்திலும் தத்துவத்திலும் ஆட்பட்டு நிற்கும் திருச்சபைகளில் ஒன்று அல்ல.

ஏற்படுவது ஒரே சபை. அதுவும் சிறிய திருச்சபை. புதிய வழிமுறையை கோடிட்டு காட்டும் அந்த திருச்சபை இதுகாறும் பூமி கண்ட கலாச்சாரம்  பௌத்தம், சமணம், கிருஸ்த்துவம், இஸ்லாம், சீக்கியம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம், துவைதம் கடவுள் மறுப்புவாத தத்துவங்கள் கம்யூனிஸம் யூதம்,ஷிண்டோ (shinto ஜப்பான்), டோயிஸம் (taoism சைனா), ஜோராஸ்ட்ரியனிஸம் (Zoroastrianism பெர்சியா)  மிக மிக பழமையான மதமாய் இன்றளவும் கருதப்படும் ஜோராஸ்ட்ரியனஸம் எழுப்புதல் குறித்த இறுதிக்காட்சிகளை எடுத்துவைக்கின்றன.

இது போன்ற எந்த ஒரு தத்துவத்தை உள்ளடக்கிய சபையாயும், புராணத்தில் கூறப்பட்ட சிலை வழிபாட்டு கடவுளர்களையும் சாராத திருச்சபை என்பது மட்டும் உறுதியிலும் உறுதியாய் தெரிகிறது.

எனவே வள்ளலார் முதற்கொண்டு அத்தனை தீர்க்கத்தரிசிகளும் கண்டு நின்ற  அந்தத் திருச்சபையை எதிர்நோக்கி காத்திருப்போம் இறைவன் எழும்பும் நேரத்திற்காக.

ஏனென்றால் இறைவனை காணமுடியாது கண்ணுக்கு தெரியமாட்டார் என இதுகாறும் இருந்த கோட்பாட்டை உடைத்து இறுதி வரும் இறைசபையாளர்கள் தன் கண்களால் காணும் அற்புத பாக்கியம் பூமியில் அரங்கேற்றம் ஆகப்போகிறது.

இந்த பூமி இறை அருள் நிறைந்த பூமியாய் மாறப்போகிறது விரைவில் என்ற பெருமிதத்துடன் இறந்தவர்கள் மீண்டும் உயிர்பிக்கப்படுவார்கள் என்ற திடமான நம்பிக்கையோடு இக்கட்டுரையை பூரிப்போடு மனித நேயத்தோடு அன்புடன் முடிக்கின்றோம்..

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.