10/12/2017

தீர்க்க தரிசனம் : இறந்தவர்கள் எழுப்பப்படுவார்களா - 5...


இதையே பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்டராடமஸ் தன்னுடைய அதிகாரம 10 இல் 72-78 பாடல்கள் வரை சொல்லிக் கொண்டு போவதை சற்று ஆழ்ந்து சிந்திக்கலாம் இறந்தவர்கள் எழுப்பப்படும் அதிசயம் என சொல்லும் வார்த்தையில் சுகம் காணாத மனிதர்கள் போல் அறிவு ஜீவிகள் தங்களை மேதாவி போல் காட்டி கொள்ளும் பகட்டுக்காரர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும்..

ஆத்திகம் என்றால் அறிவில்லாதவன் நாத்திகன்தான் அறிவுஜீவி என்று பொய்யான மாயைக் கொள்கையை கடைப்பிடித்து நிற்போரும் அறிவியல் படித்தவன் ஆண்டவனுக்கு சமானம் எனும் பேதமை கொண்ட போலிகள் சற்று நோஸ்டராடமஸ் வாழ்க்கை வரலாற்றை சிந்திக்க வேண்டும்..

இவர் அறிவியல் துறையிலே மருத்துவ துறையிலே டாக்டர் பட்டம் பெற்று சிறந்த சேவையை அந்நாட்டு மக்களுக்கு செய்து வந்தவர்.

பிளேக் நோயினால் அந்நாட்டு மக்கள் அவதியுற்று மரணங்களை தழுவி நின்றபோது ஓயாமல் இரவும் பகலும் உழைத்து நின்ற சேவையாளன் என்ற பெயர் பெற்ற இவர், தன் மனைவியை அதே பிளேக் நோய்க்கு பறிகொடுத்து நின்றபோது, சோகத்தில் ஆழ்ந்து நின்றார் . இப்படிப் பட்டவர் தனக்கு ஞானம் கிடைத்தபோது விஞ்ஞான அறிவைப் பெற்றுநின்ற அந்த விவேகி மெய்ஞான அறிவை பெற்று தீர்க்கதரிசனங்கள் எழுதி நின்றவர் இந்த மருத்துவ விஞ்ஞானம் படித்த மேதை. 

ஏன் இதை சொல்கிறோம் என்றால் விஞ்ஞான அறிவைப் பெறாதவன் தான் மெய்ஞான அறிவை எடுத்து சொல்லி நிற்பான் என்றும் மூடர்களின் சிந்தனைக்கு எடுத்துரைக்க நினைத்து இக்கருத்தை இங்கு கொணர்ந்தோம்.

ஓடம் தீர்க்கதரிசி வானத்தில் இருந்து வந்து இறங்குபவரை மேகத்தினிடையே நிற்பவரை மேதினியில் சொல்லி நிற்க அந்த வரும் நாள்  (எழுப்பப்படும் நாள் ) உலகத்திற்கு இன்பம் விளைவிக்கும் நாள் உலக மக்கள் எக்குறையுமின்றி சந்தோஷம் அடையும் நாள் மட்டுமின்றி அவரைச் சார்ந்த மக்களையும் மீண்டும் உயிர்பித்து சந்தோஷம் அடைகின்ற நாள் அவருடைய சபை ஆனந்தமயமாய் எழும்பும் நாள் அவரைக்கண்டு அதர்மகாரர்கள் நடுங்குவார்கள் என்றும் அவரே அரசனாகவும் வருவார் என்பதை ஓடத்தீர்க்கதரிசி வானவர்கள் வந்திறங்கும் வற்றாத அருள்தோணி கோன் அமரும் குமரர் அவர் என்ற வரிகளிலிருந்து நோஸ்டராடமஸ் கருத்தும் ஓடம் தீர்க்கதரிசியின் கருத்தும் ஒத்துப்போய் இருப்பதை காணலாம்.

இதே நோஸ்டராடமஸ் பூமியில் அப்போது இறுதி காலத்தில் ஏற்படும் திருச்சபையில் இருக்கும் மாபெரும் குருமனிதரோடு இணைந்து பணியாற்றி உலகத்தை இன்புற செய்வது, இவரும் இறைவனோடு சேர்ந்து திரித்துவத்தை சுட்டிக் காண்பிப்பதாய்த் தெரிகிறது.

அடுத்தடுத்த பாடல்களும் ஓடம் தீர்க்கதரிசியை போலவே விபத்தை வர்ணித்து அந்த விபத்து எப்படி நடந்தது என வர்ணிக்கிறார்.

பின்னர் அடுத்தடுத்த பாடலில்  20 ஆம் நூற்றாண்டு முடிந்து 21 ஆம் நூற்றாண்டு தொடங்கி வரும்  ஆண்டுகளில் 7 (ஏழு) என்ற எண் சுழற்சி பெறும் ஒரு ஆண்டில் இந்த விபத்து நடப்பதாகவும் விபத்து நடைபெற்று உடல் பிரேத ப‌ரிசோதனை‌ நடைபெறுவதையும் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் அவரும் அவரோடு சேர்ந்த அச்சபையில் இறந்தவர்களும் உயிர்ப்பிக்கப்படுகிறார்கள்.

பின் வெளியில் உள்ள மக்கள் தங்கள் இறந்த மக்களை இறுதியில் உள்ளவரிடம் இரந்து நின்ற போது கல்லறைகளை விட்டு எல்லோரும் எழுகிறார்கள் என்று செல்லப்படுவது இறந்தோர் மீண்டும் உயிர்பெற்று ஆவதைப்பற்றி ஒருவர் சொல்வது இது ஒன்றுமே தெரியாதவன் ஒரு ஞானசூன்யம் பேசும் வார்த்தையல்ல.

ஒன்றும் தெரியாதவன் உலகத்திற்கு வழிகாட்டும் நிலையில் பேசுபவனும் அல்ல பிழைப்புக்காக பொருளற்ற வார்த்தைகளை அருளற்றமுறையில் அள்ளித்தெளிப்பவனும் அல்ல.

இடத்திற்கு இடம் சூழ்நிலைக்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்  கொள்ளும் பச்சோந்தியும் அல்ல .

வாய் ஒன்று பேச செயல் ஒன்றும் செய்பவனும் அல்ல இந்த நோஸ்டராடமஸ்.

அரிய முறையிலே மருத்துவ துறையிலே தன் ஆராய்ச்சியை முழுமையாக ஈடுபடுத்தி உண்மை சேவை செய்தவருடைய வாழ்க்கையில் அவருக்கே ஆச்சரியப்படும் விதமாய் காலம் கொடுத்த பரிசு தீர்க்கதரிசனங்களை காணும் விதம் செத்தவர்கள் எழுந்திருப்பதாய் இங்கே சொல்பவர் யார்? 

இறந்த உடலை பரிசோதனை செய்து பிரேத ப‌ரிசோதனை‌ செய்யும் அறிவியல் கண்ட டாக்டர்.

ஏதோ எவனோ சொன்னான் இதை நம்பாதீர்கள் என குருட்டாம்  போக்கில் பேசும் குருடர்களும் மூடர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல.. சிந்திக்க மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.