28/03/2018

சேலம் – மேட்டூர் காவிரி ஆற்றில் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு மீன்கள் செத்துக் கிடக்கிறது...


மேட்டூர் அணையின் காவிரி ஆற்றில் ஓடும் நீர் பச்சை நிறத்தில் இருப்பதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர் இந்த நிலையில் காவிரி ஆற்றில் சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன.

அதாவது, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் அங்கிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செக்கானூர் தடுப்பணையில் தடுக்கப்பட்டு மீன் உற்பத்தி நடைபெறுகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிதக்கும் மீன்களைப் பொது மக்கள் அள்ளிச் செல்கின்றனர்.

இந்த நிலையில் காவிரி நீரைக் குடிநீராகப் பயன்படுத்தி வருவதாகவும், உடனடியாக மீன்களை அகற்றாவிட்டால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதுபோன்று சமீபத்தில் சுமார் ஐந்து டன் மீன்கள் செத்து மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரி கரையோரம் இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனக் கழிவுகளாலேயே மீன்கள் செத்து மிதப்பதாகப் புகார் எழுந்தது.

எனவே மாசுக்கட்டுப்பாடு வாரியம், மீன்வளத் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகள் காவிரி ஆற்றை ஆய்வு செய்து தண்ணீர் மாதிரி எடுத்துச் சென்றனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.