14/07/2018

நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 1...


நகர மக்களுக்கான உணவு முறை...

காலை 8 மணிக்குள் பருகவும்.

குளிர்சாதனப்பெட்டி ஜீஸ்களை தவிர்க்கவும்..

“நோ பெப்ஸி,நோ கோக்.. நோ பழச்சாறு“

கடையில் வாங்கி குடிக்கும் பழச்சாறு ஆரோக்கியமானது அல்ல..

நஞ்சுகலந்தே வருகிறது , அதனை சில நஞ்சில்லா அங்காடியில் குடித்தாலும் ஐஸ் சேர்க்கமால்,வெள்ளைச்சக்கரை சேர்க்கமால் பருகவும்.

 1-  சிவப்பு பரங்கிக்காய்ச் சாறு, பீட்ரூட் சாறு, நாட்டுச்சக்கரை சேர்த்து பருகவும், நஞ்சில்லா மாதுளை கிடைத்தால் , கேரட்ச்சாறு,,

 2- கற்றாழைச்சாறு  வீட்டு மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகவும்.

 3. தூதுவளைச்சாறு, வல்லாரைச்சாறு, முடக்கத்தான்ச்சாறு, கொத்தமல்லித்தழைச்சாறு சிறிது அறைத்த கல் உப்பு சேர்த்து பருகவும்.

 4- நெல்லி பழச்சாறு சிறிது உப்பு.

 5- கற்றாழைச்சாறு  வீட்டு மோருடன் சிறிது உப்பு சேர்த்து பருகவும்.

 6– வெந்தயப்பொடி டீ அல்லது ஊறவைத்த நீர் , வேம்பு இலை தேனீர்

 7- பாதம் பிசின்  நாட்டுச்சக்கரை அல்லது பனங்கற்கண்டு சாறு.

8. மனத்தக்காளி இலைச்சாறு அல்லது பழம் , ப ப்பாளி பழச்சாறு

7 நாளுக்கு மாற்றி மாற்றி எடுத்து  கொள்ளவும்.

தேங்காய் துருவல் சேர்த்த உளுத்தம் கஞ்சி. வாரம் 1 முறை மாலை தவறாது எடுத்து விடுங்கள்.

தேயிலை டீக்கு பதில்..

கொய்யா இலைகள் 100, எலுமிச்சை இலைகள் 100, ஆவாராம் பூ 100, நெல்லி இலை 100, செம்பருத்தி பூ 50 , வேம்பு இலைகளை 50 நீரில் கொதிக்க வைத்து நாட்டுச்சக்கரை அல்ல கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும் .

பச்ச இலை கிடைத்தால் நல்லது... இதனை அப்படியே கொதிக்க வைத்து நாட்டுசக்கரை அ கருப்பட்டி சேர்த்து பருகலாம்.

(இதனை அனைத்து இலைகளையும் சேகரித்து காயவைத்து பொடி செய்து வைத்து கொள்ளுங்கள்)

ஆட்டுகால் சூப் வெயில் காலத்தில், குளிர்காலத்தில் நாட்டுகோழிகறி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.