14/07/2018

நகரமக்களும் கிராமத்து உழவர்களையும் இனைக்கும் பாதை - 3...


மாலை: 8 மணிக்குள் உணவை முடிப்பது நல்லது.

பொதுவாக சூரியன் மறைந்த பிறகு உணவு அருந்துவது சிறந்தது அல்ல என்றாலும் நகரத்தில் இரவு வேலை பார்ப்பதால் இத்தகையத்தீர்வு.

பாணி பூரி மசாலாக்களை தவிர்க்கவும்.. ஹிந்திகாரன் கடையை தவிர்க்கவும். நோய் சேரும் மேலும் வணிகம் வீழ்ச்சி அடையும். பசித்தால் ஆரோக்கியமான நம் தானிய கஞ்சி சூப் அறுந்துங்கள், எள்ளு உருண்டை, கடலை உருண்டை போன்றவை உண்ணவும்.

இட்லி 4 அல்லது தோசை 2..

உடன் சிறு தாணியக் மசாலா கஞ்சி குடிப்பது சாலச்சிறந்தது.

குக்கர் உணவு முறையைத் தவிர்ப்போம்.

வாழைப்பழம் கற்பூர வாழை , தேன் வாழை,  சிவப்பு அ வெள்ளை கொய்யா, போன்ற நாட்டு பழ வகைகளை சாப்பிடவும்.

சிறுதாணிய கஞ்சி என்பது... லவங்கம், பட்டை ,மிளகு ,வெங்காயம், தக்காளி , கொத்தமல்லி சேர்த்து ஊறவைத்த (சிவப்பு மட்டை அரிசி  5 மணிநேரம் ஊற வைக்கவும், வேகுவதற்கு 40 நிமிடம் ஆகும் அல்லது மற்ற சிறுதானியத்தையும் பயண்படுத்தலாம்).

அனைத்தையும் 8 மணிக்குள் முடிக்கவும்.

மேலும் , இரவு வேலை பார்ப்பவர்கள் முடிந்தவரை எண்ணெய்  பண்டங்களை தவிர்த்து..  கொய்யா, வாழை, நெல்லி போன்ற பழங்களை உண்ணவும்..

சோர்வு ஏற்பட்டால்..

கருப்பட்டி தேனீர் அல்லது தேனீர் பருகவும். நான் கூறிய  இலை பொடியை அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்.

சுடு நீரை வாங்கி பொடி போட்டு கலக்கி பருகலாம்.

(கிரீன் டீ வேண்டாம்).

பின்குறிப்பு...

1 . மாதம் 2 முறை எண்ணெய் கண், காது என உடல் முழுக்க தேய்த்து 30 நிமிடத்திற்கு பின்  குளியுங்கள். சீயக்காய் தேய்த்து குளிப்பது 8 மணிக்குள் இருக்க வேண்டும்.

குளித்த உடன் வெப்பம் தணியும்.

விடுமுறை நாளில் எண்ணெய் தேய்ப்பதால் உணவு கோழி வேண்டாம், மட்டன் அல்லது மீன் எடுத்து கொள்ளவும் இட்லி ,தோசையுடன் .

2. மிக முக்கியமானது தினமும் இரவு தூங்கும் முன் கை, கால் முகம் கழுவிவிட்டு..

உச்சந்தலையில் 5 சொட்டும், கால் பாதத்தில் எண்ணெயை நன்கு தேய்த்து விட்டு உறங்கவும்.

3. முற்றிலும் இரவு வேலையை தவிர்க்க ஆவணச்செய்யுங்கள்.11 மணி முதல் 5 மணி வரை உறக்கம் மிக அவசியமானது.

4.பகல் உறக்கம் கூடாது எனினும்... அதிகம் 30 முதல் 40 நிமிடம். இந்த நகர வாழ்வில் மாறிவிட்டது.இயல்பாக வருவதை தள்ளி போட வேண்டாம்... அது வரக்காரணம் ஓய்வுக்காகத்தான்.. அவ்வளவும் உடம்பு வலுவிழந்து உள்ளது என்பதை காட்டுகிறது.அதனை மீட்டெடுக்கவே உறக்கம் கேட்கிறது.

5. உணவுமுறை பின்பற்றுங்கள் , கம்பனியின் சூழலியலை சற்று நாட்டு மரங்களை நட்டு சுவாசக் காற்றை சுத்தபடுத்துங்கள்.

ஐ.டி தன்னார்வு இயக்கங்கள் தயவுசெய்து முதலில் முன்னெடுக்க வேண்டியது குரோட்டான்ஸை தவிர்த்து நாட்டு மரங்களை நடுங்கள்..

பிறகு சுவற்றுக்கு பெயின்ட் அடிக்கலாம்.. அடித்தாலும் பயணில்லை என்பதை நேரில் பார்த்தவன்.

6. அனைத்து காய்கறிகளும் மாடித்தோட்டம் அமைத்து அல்லது நஞ்சில்லா உழவர்களிடம் வாரத்திற்கு தேவையானவற்றை வாங்கி கொள்ளவும்.

7. 3 மாத்ததிற்கு 1 முறை இளைஞர்கள் அல்லது குடும்பங்கள்.. சுற்றுலாவாக 2 நாட்கள்... வேளாண்மை பசுமை கிராமங்களுக்கு சென்று வரவும்.

பசுமை காடுகளுக்கு செல்லவும் சிறையில் அடைக்கப்பட்ட பல்லுயிர் வண்டலூருக்கு அல்ல...

வேலை நெருக்கடி, பள்ளிக்கல்வி, தேர்வு  விடுப்பு இல்லை எனத் தவிர்த்தால்..

மனநோயில் இருந்து மீள முடியாது. உங்கள் பணத்தேடலில் குழந்தைகளை மன அழுத்தத்தில் புதைத்து நோயாளியாக வளர்ப்பதை விட பிறக்காமால் இருப்பதே நல்லது.

பிராணவாயுவின் சுத்தம் செய்யும் பூசமரத்தை சென்னையில் பார்ப்பதே உலக அதிசியமாக இருக்கின்றது.

நகரத்து அபார்ட்மன்ட் தமிழர்களுக்கு...

இயற்கையின் வேண்டுகோள்-
காற்றை சுத்தபடுத்துவோம்.

பசித்து உண்ணுங்கள் .... வாயை மூடி மென்று உண்ணுங்கள். வேலைபளுவால் உணவுமுறையை மாற்றாதீர்கள்.

பணத்தை விட உடல்நலனில் அக்கறை கொள்ளுங்கள்..

டாலருக்கு உழைப்பதை நிறுத்திவிட்டு சுய தொழில் செய்ய முன்னெடுங்கள். இதுவும் ஒரு போராட்டாமே.

டாலர் தேடலில்  பழங்குடி தமிழ்  இனத்தை அழித்து விடாதீர்கள்.

நோய்க்கான கசாயம்...

தேவைப்படும் போது பயண்படுத்தவும்.

கருஞ்சீரகம் 200 கி, வெந்தயம் 200, ஓமம் 100 ,பணங்கற்கண்டு சேர்த்து அறைத்து வைத்து  கொள்ளவும். 

1 தேக்கரண்டி சுடுநீரில் கொதிக்க வைத்து தேனீராக பருகவும்.

சளி ஆஸ்துமா போன்றவைக்கு...

தூதுவளை, முசு முசுக்கை , கற்பூரவல்லி ,ஆட  தொடை போன்ற  பொடிகளை வாங்கி கலந்து வைத்து கொள்ளவும்.

தேவைப்படும்போது தேனீராக பயண்படுத்தவும்.

1 தேக்கரண்டி சுடுநீரில் கொதிக்க வைத்து தேனீராக பருகவும்.

இந்த இலைகள் கிடைத்தால் ஆவி பிடிக்கவும்.

பல் துளக்கும் பேஸ்ட், மைதா, ஓட்டல் உணவு தவிர்த்து சமைத்து இளைஞர்கள் உண்ணலாம்.

ஓட்டல் உணவு தவிர்க்க முடியாது என்றாலும்.. கூறிய பழம், மற்றும் மூலிகைச்சாறுகள் ,தேனீர் தவறாமால் கடை பிடியுங்கள்.

டீ,காபி , புகையிலை , மது பழக்கத்தை கைவிடுங்கள் .

பழங்குடி தமிழினத்தை மீட்டெடுக்க ஒன்று படுங்கள்.

Ro நீரை தவிர்த்தால் மிகவும் நல்லது.. முயற்சி செய்து நீர்நிலைகளை மீட்டெடுங்கள்.

தயவுசெய்து உழவர்களையும் நிலங்களையும் மீட்க குரல் கொடுங்கள்

இல்லையேல் மரபணு மாற்று உணவை உண்ணத் தயாராக இருப்போம்.

உங்களுக்காகத்தான் கிராம மக்கள் உழைக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.