14/07/2018

மை லார்ட் என்று அழைப்பதாலேயே உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களை கடவுள் என்று நினைத்துக் கொள்கிறார்கள்...


நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நல்ல மனிதர்தான்.   ஆனால், நீதிபதி ஆனதும், அவரும் தன்னை கடவுள் என்று நினைத்துக் கொண்டாரோ என்றே தோன்றுகிறது.

போராட்டம் நடத்துவது என்பது அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை.  போராட்டம் என்றாலே சட்ட மீறல்தான்.  வெள்ளையனின் சட்டத்தை மீறி போராட்டம் நடத்தித்தான் விடுதலை பெற்றோம்.

காவல் துறையின் முன் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் ஜாமீன் என்று சொல்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம் ?  எத்தனை ஆணவம் ? 

காவல் துறையினர் கைது செய்வது, ஒரு வழக்கின் புலனாய்வுக்காக.   அந்த வழக்கின் புலனாய்வுக்காகத்தான் கைது நடவடிக்கையே.  அந்த புலனாய்வு முடிந்து விட்டதா, ஒருவர் சிறையில் இருக்க வேண்டுமா என்பதை ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவது மட்டுமே நீதிபதியின் வேலை.

காவல்துறையினர் முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால்தான் ஜாமீன் என்று ஒரு நீதிபதி கூறுவது, நீதிபதியானதுமே தங்களுக்கு இரண்டு கொம்பு முளைத்து விட்டது என்ற இவர்களது அகங்கார எண்ணமே. 

நீதிபதி ஜெகதீஷ் சந்திரா தனது தவறை திருத்திக் கொள்வார் என்று நம்புகிறேன். என கூறுகிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.