நமது கண்களே எல்லாவற்றிற்கும் பிரதானம். பிறந்தது முதல் இறக்கும் வரையில் கண்களை வைத்துத்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றோம்.
கண்களில் காந்த சக்தியும், ஈர்ப்பு சக்தியும் உண்டு. கண்கள் கிரகிக்கும் சக்தியை மனதில் பதிய வைத்துவிடும். நாம் எதை நினைத்தாலும், அந்த உருவமும், பொருளும், கண்களால் காணும் கற்பனையே, இதை மனது சித்தரித்துக் காட்டும். அறிவு அதை ஆராய்ச்சி செய்யும்.
நமது கண்களுக்கு, உலகத்துக்கு அப்பால் சந்திர சூரிய மண்டலங்களையும் கடந்து, நட்சத்திர மண்டலங்கள் வரையில் தெரியும்.
மனித வளர்ச்சி, விஞ்ஞானம், ஓவியம், காவியம், கற்பனை, இன்னும் எத்தனையோ, அத்தனைக்கும் கண்களே முக்கிய காரணம். நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாச் சம்பவங்களுக்கும் கண்களே காரணம்.
ஜாடை, செய்கை, அன்பு, ஆத்திரம், ஆசை, அதிகாரம், அதிர்ச்சி, ஆணவம், கோபம், கருணை, வேதனை, பெருமை, பொறாமை, வஞ்சகம், காதல், காமம் இன்னும் எத்தனையோ, அத்தனையும் கண்களின் பார்வையினாலேயே முடிந்து விடும்.
இவை யாவையும், இன்னும் சில குற்றம் குறைகளையும் கண்களே காட்டிக் கொடுத்துவிடும். இறைவனை அடைவதர்க்குக் துணையிருந்தும் செயல்படும்.
கண்களைப் போன்ற மாபெரும் சக்தி வேறு எதுவுமே கிடையாது. இதனால் தான் குழந்தைகளையும், தெய்வங்களையும், அன்பு உடையவர்களையும், கண்ணே, கண்ணின் மணியே என்று புகழ்கின்றார்கள்.
மனக்கண், அறிவுக்கண், ஞானக்கண் என்று கண்களை உவமானப்படுத்திக் கொள்கின்றார்கள்.
சில காரியங்களையும், பொருள்களையும், நாய், பூனை, மாடு போன்ற சில ஜீவராசிகளையும் கண்களைப் போல் கருதிப் பாவிக்கின்றார்கள்.
ஜீவன்களிடம் கண் பார்வை சக்தி...
மீன்கள் தண்ணீரில் முட்டையிட்டுச் சில நாட்களுக்குப் பிறகு தம் முட்டைகளைக் கண்களால் கூர்ந்து பார்க்கும். உடனே அது குஞ்சு பொரித்து விடும்.
நல்ல பாம்புக்கு அதிகப் பசி எடுக்கும் பொழுது, மரத்தின் மேல் உள்ள பறவையை, தன் கண்களால் உற்று நோக்கும். அந்தப் பறவை மயங்கிக் கீழே விழும். உடனே பாம்பு அதை விழுங்கி விடும்.
இதுபோல் மலைப்பாம்பும், சிறு மிருகங்களைப் பார்த்ததும், தன் கண்களால் உற்று நோக்கும். உடனே அந்தச் சிறு மிருகங்கள் தாமே வந்து, மலைப்பாம்பின் வாயில் சிக்கிக் கொள்ளும்.
பல்லி, தவளை, மீன், முதலை இவைகளுக்கும் இத்தகைய கண்பார்வை உண்டு.
ஆகாயத்தில் வெகு தூரம் பறக்கும் கருடன், கழுகு போன்ற பறவைகளுக்குப் பூமியில் உள்ள சிறு பொருளும் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.
பச்சோந்தி மயிலைப் பார்த்து விட்டால், தன கண்களால் மயிலை உற்று நோக்கும். அப்பொழுது மயில் தானே வந்து, பச்சோந்தியிடம் கழுத்தை நீட்டும். உடனே பச்சோந்தி மயிலின் கழுத்தைக் கடித்துத் துண்டித்து அதன் இரத்தத்தைக் குடிக்கும்.
கண் திருஷ்டி வேகம்...
இத்தகைய காந்தப் பார்வை சில மனிதர்களுக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் நம்மைப் பார்த்தால், ஒன்றும் பேசாமல் அடங்கி விடுகின்றோம். ஒரு சிலர் கண்களைப் பார்க்கும் பொழுது, நம்மையும் அறியாமல், பக்தி, விசுவாசம், அன்பு ஏற்படுகின்றன. சிலர் நம்மைப் பார்க்கும் பார்வையில் மயங்கி விடுகின்றோம். சிலர் கண் பார்வைப்பட்டாலே அவதிக்குள்ளாகின்றோம். இதைக் கண் திருஷ்டி என்பார்கள். இவர்கள் பிறக்கும் பொழுது இவர்களின் கண்களில் இரத்தத் துளிகள் பட்டு, அதில் கண் விழித்தவர்கள் என்பார்கள்.
மாந்திரீகமும் கண்ணும்...
சிலர் கண்களால் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் போன்ற மனோவசியமும், கண்கட்டி வித்தைகளும் செய்வார்கள். சூன்யம் என்னும் மாந்திரீகமும் கண்களால் செய்யக் கூடியதே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.