21/10/2018

கட்டமைப்பு, அடிமையாக்கப்பட்ட அகதிகளாக இன்று நாம்...


ஏன் படித்தேன்?

எதற்காக இவ்வாறு முகம் அறியா ஒரு பெருநிறுவன முதலாளிக்கு என் இரத்தத்தை உழைப்பால் உருக்குகிறேன்?

நிம்மதியே இலலாமல் ஏன் ஓடுகிறேன் ?

நான் நானாகவே இல்லை..

ஒரு வேளை நான் இந்த கல்விக்கொள்கையை அறியாமல் இருந்திருந்தால், கல்வி பயிலாமல்  இருந்திருந்தால்,

நாகரீக நகருக்குள் பாதம் பதிக்காமல் இருந்திருந்தால் நான் நானாகவே இருந்திருப்பேனோ?

அப்ப யாருக்காகனுது இந்த கல்வி கொள்கை?

படிக்கும் பொழுது ஒரு வகுப்பறையின் எண்ணிக்கை 40,50 என இருக்கும்.

அப்போது நகைச்சுவையாக ஆட்டுமந்தையில் இருப்பதை போல் உள்ளது என்று நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்து இருந்தோம்...

ஆனால் இன்று தான் தெரிகிறதுஅன்றே என்னை ஆட்டுமந்தை போல உருவாக்கிவிட்டான் என்று...

முந்தைய தலைமுறையினரிடம் சுயதொழில் என்று எல்லோருக்கும் இருந்தது,ஆனால் இன்று அது யாரிடம் உள்ளது?

அன்று என் பாட்டன் முதலாளியா இருந்தான் இன்று நான் தொழிலாளியாக இருக்கிறேன். இதற்கு காரணம் யார்?

ஏன்?...

அப்படியானால் என்னை தொழிலியாக மாற்றவா இந்த கல்வியை என் மீது திணிக்கப்பட்டது?

இடையில் என் தந்தையையும் என்னையும் மாற்றியது யார்?

இன்னும் எவ்ளோ தலைமுறையா இது தொடரும்?

அடுத்த தலைமுறையும் இந்த கட்டைமைப்பில் தான் வாழ வேண்டுமா?

அதற்கு அனுமதிக்க முடியாது...

நான்  வேண்டுமென்றால் எதும் தெரியாமல் வளர்ந்திருக்கலாம் ஆனால் என் அடுத்த தலைமுறையினரை இதில் திணிக்க மாட்டேன்...

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" இதை வெறும் பழம்மொழி என்று கடந்து விட்டோமா என தோன்றுகிறது...

ஆனால் இதன் தெளிவு இப்பொழுது தான் கிடைத்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கு அனுபவத்தின் மூலம் உலக இயங்கியலையும் தற்சார்பு வாழ்வியலையும் கற்றுகொடுத்திடுவோம்...

நம்மை போல அவர்களையும் அச்சிடப்பட்ட புத்தக குவியலில் முடக்கிட வேண்டாம்...

மாற்றம் என்னிலிருந்தே தொடங்கட்டும்... என்  அடுத்த தலைமுறைக்கு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.