17/04/2017

சசி குடும்பத்தை துரத்திவிட்டு பன்னீருக்கு பதவி.. இரட்டை இலையுடன் ஆர்.கே.நகர் தேர்தல் திட்டம்...


தினகரனை ஒரங்கட்டும் முயற்சியில் கொங்கு மண்டல அமைச்சர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

தம்பிதுரை, வைத்தியலிங்கம், தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகிய அமைச்சர்கள் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

இரண்டாக பிரிந்துள்ள கட்சியை ஒன்றிணைத்து, பன்னீர்செல்வத்திற்கு பொதுச்செயலாளர் பதவியை கொடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்டு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல்கட்டமாக தினகரனை அ.தி.மு.க.,அலுவலகத்திற்கு வரவழைத்து பேச முற்பட்டனர். தினகரன் வராததால் அவர் வீட்டிற்கே சென்று கட்சியை விட்டு விலகி இருக்கும்படி கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சில கொங்கு அமைச்சர்கள் தினகரனுக்கு மறைமுகமாக சில அழுத்தமும் கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதாவது தற்போது இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்பதால்தான் உங்களுடன் இருக்கிறார்கள்.

நீங்கள் (தினகரன்) கட்சியை ஆட்டிப்படைக்க நினைத்தால் அத்தனை எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் உங்களுக்கான ஆதரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் தினகரனே சற்று மிரட்சியில் இருப்பதாகவே தெரிகிறது.
தினகரன் பரிந்துரையில் பதவி கிடைத்த செங்கேட்டையன், ராதாகிருஷ்ணன் மட்டுமே பன்னீருடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுக ஒன்றாக இணைந்து சசிகலா குடும்பம் இல்லாத கட்சியாக மாறவுள்ளது. இது அ.தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.