23/09/2017

யாரை கேட்டு தகுதிநீக்கம் செய்தீர்கள்.. வாங்கிக் கட்டிக் கொண்ட எடப்பாடி: விஷயம் வீதிக்கு வந்ததால் ஆட்சியை கலைக்க ஆளுநர் திட்டம்?


தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சில நாட்களாக தமிழக அரசியல் கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதனால் ஆளுநர் கடும் அதிருப்தியில் உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்ற நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், எடப்பாடியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது ஏன் நடவடிக்கை எடுத்தீர்கள்? நடவடிக்கை எடுக்கப் போவதை நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்று கடுமையாக வசைபாடியிருக்கிறார் ஆளுநர்.

இதனால் அதிர்ந்து போன எடப்பாடி, நாங்கள் அருண் ஜெட்லிகிட்ட அனுமதி கேட்டுத்தான் இதை செய்தோம், உங்களுக்கு அங்கிருந்து தகவல் வந்திருக்கும் என்று நாங்கள் நினைத்திருந்தோம் என்று கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பாகிப்போன ஆளுநர் , மற்றவர்கள் சொல்லுவார்கள் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் தான் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்.

நீங்க அவசரப்பட்டு முடிவு எடுத்திட்டீங்க, அதனால் என்னுடைய பெயர் இப்பொழுது கெட்டுப் போய் விட்டது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் என்மீது குற்றம் சாட்டி வருகின்றார்கள்.

ஒருபக்கம் அரசியல் கட்சிகள், இன்னொரு பக்கம் நீதிமன்றம் என்று மாறி மாறி என்னிடம் கேள்வி கேட்பார்கள்.

அனைத்திற்கும் நான் தான் இப்போது பதில் சொல்லியாக வேண்டும் என்று கடும் கோபத்துடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பேசியுள்ளார்.

அதன் பிறகு தலைமை செயலாளர் கிரிஜாவை தொடர்பு கொண்ட ஆளுநர், இனி நிர்வாகத்தில் எந்த நடவடிக்கை எடுத்தாலும் என்னிடம் சொல்லி விட்டுத் தான் செய்ய வேண்டும்.

அமைச்சர், முதலமைச்சர் என்று யார் சொன்னாலும், என்னிடம் அனுமதி வாங்கி செய்யுங்கள் என்று உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

அதனோடு நிற்காமல், தனது ஆந்திர நண்பர்களிடம் தமிழக நிலவரம் குறித்து ஆலோசனை செய்துள்ளாராம் தமிழக ஆளுநர் .

மேலும், ஜனாதிபதியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரத்தை எடுத்து கூறி, ஆட்சியை கலைத்து விடலாம் என்கிற ஆலோசனையை கூற இருக்கிறாராம் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இதனால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.