23/09/2017

கோல்மால் செய்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தப்பிய ஓ பன்னீர்செல்வம்: அம்பலப்படுத்தியது இந்தியா டுடே செய்தி சேனல...


வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பன்னீர்செல்வம் மீது 2006'ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில், 2011'ம் ஆண்டு பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற ஓபிஎஸ், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அந்த வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட வைத்துள்ளார்.

இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்கின்றனர் சட்ட வல்லுனர்கள். ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டால், முழுவதுமாக  மறுவிசாரணை நடத்த முடியாது. வேண்டுமானால், கூடுதலாக விசாரணைக்கு உத்தரவிடலாம்.

ஆனால் ஓபிஎஸ் வழக்கில், மறு விசாரணை நடத்தப்பட்டது மட்டுமல்லாமல், குற்றப்பத்திரிகையில்  அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.

இது முழுக்க முழுக்க சட்ட விரோதம் என்று கருத்து தெரிவித்துள்ளனர் சட்ட நிபுணர்கள்.

ஆங்கில சேனல் அம்பலப்படுத்திய இந்த செய்தியை வழக்கம் போல் தமிழ் ஊடகங்கள் மறைத்து விட்டன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.