23/09/2017

மெர்சல் என்ற பெயரை விஜய் படத்துக்கு பயன்படுத்த ஐகோர்ட் தடை...


தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படமாக மெர்சல் உருவாகியுள்ளது. இதில், முதன் முறையாக 3 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும், வடிவேலு, சத்யன், சத்யராஜ், கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், எஸ்.ஜே.சூர்யா, சீனு மோகன், யோகி பாபு, மிஷா கோஷல் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் தீபாவளிக்கு  வெளியாகிறது.  இதுவரை வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன் சிங்கிள் டிராக் போன்றவை சாதனை படைத்த நிலையில், மெர்சல் டீசரும் சாதனை படைக்கவுள்ளது.

மெர்சல் படத்தின் டீசர் இயக்குனர் அட்லி பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. டீசர் வெளியான 20 மணி மணி நேரங்களில் 7,12,000 லைக்குகள்; 1 கோடி பார்வைகள் பெற்று உள்ளது. எனவே, யூடியூபில் அதிக லைக்குகள் பெற்ற டீசர் என்கிற சாதனையைப் படைத்துள்ளது மெர்சல் டீசர்.

இந்த நிலையில் மெர்சல்  என்ற பெயரை விஜய் தனது படத்திற்கு பயன்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து உள்ளது.

தயாரிப்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில் அக்.3ம் தேதி வரை மெர்சல் தலைப்பில் படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என ஐகோர்ட் தடை விதித்து உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.