05/09/2017

அனிதாவிற்க்கு அஞ்சலி செலுத்த அண்புமணி அவர்கள் செல்லாதது ஏன் ?


காரணம்.. அனிதாவிற்கு அஞ்சலி செலுத்த அன்புமணி ராமதாஸ் செல்லாததன் பின்னணி இதுதான்.

அனிதாவின் இறுதி சடங்கில் அன்புமணி ஏன் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வியும், விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது.

நீட் தேர்வுக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, தன்னுடைய மருத்துவர் கனவு பறிபோனதால் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பா.ம.க.வின் இளைஞரணி தலைவரும், தருமபுரி எம்.பி யுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை.

ஆனால், நீட் தேர்வு பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் பல முறை பேசிய ஒரே ஒரு தமிழக எம்.பி. அன்புமணி ராமதாஸ் மட்டுமே.

மேலும், குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை பல முறை சந்தித்து நீட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரத போரட்டமும் நடத்தியிருந்தார்.

இது தவிர கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி பிரதமர் மோடி விலக்கு அளிக்க தயாராக இருப்பதாகவும், தமிழக பாஜகவினர் தான் நீட் கட்டாயம் வேண்டும் என்று முரண்டு பிடிப்பதாகவும் கூறினார்.

அதனைத் தொடர்ந்தே ஆகஸ்டு 13-ம் தேதி நிர்மலா சீத்தாராமன் ஓராண்டுக்கு விலக்குக்கு ஒப்புதல் அளிக்க தயார் என்று கூறினார்.

இப்படி நீட் தேர்வுக்காக தொடர்ந்து போராடிய டாக்டர் அன்புமணி ராமதாஸ், மாணவி அனிதாவின் இறப்பு தன்னை வெகுவாக பாதித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவில்லை.

அதற்கு காரணம், சில அரசியல் காட்சிகள் அனிதாவின் இறப்பை வைத்து அரசியல் செய்ததாலும், அந்த பகுதியில் அசாதாரணமான சூழல் நிலவி வந்ததாலும் அவர் நேரில் வருவதை தவிர்த்திருக்கிறார்.

அதற்கு உதாரணமாக, அனிதாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க சென்ற டிடிவி.தினகரன் மற்றும் சீமானையும் தடுத்திருக்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு காரணம் யார்? என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.

இப்படிப்பட்ட சூழலில் அன்புமணி அங்கே வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

நீட் தேர்வு விவகாரத்தில் இறந்த அனிதாவை, வி.சி.க தனது அரசியலுக்காக முழுக்க முழுக்க பயன்படுத்திக் கொண்டது என்று மாணவர் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்னனர்.

அங்கே கலந்துக்கொண்ட வி.சி.க கூட்டணி கட்சிகளை தவிர்த்து, மற்ற கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்பை சந்தித்தனர் என்பதே உண்மையாகும்.

இத்தகைய சூழலில் அன்புமணி அங்கு செல்லாமல் தவிர்த்ததே, அறிவார்ந்த செயல் என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.