பன்னாட்டு கம்பெனிகளின் கப்பல்களும், இந்திய கப்பல்களும் இப்படி நமது படகுகள் மீது மோதி மூழ்கடிப்பதும், எண்ணற்ற மீனவர்கள் கடலோடு சாவதும் மாதத்திற்கு ஒரு நிகழ்வாக இப்போது தொடர்கதையாகி விட்டது.
ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருந்தாலும் காது கேட்காதவர்களுக்காக மீண்டும் மீண்டும் ஊதுவோம்.... நண்பர்களுக்காக, கடந்த 6ம்தேதி கொச்சி நடுக்கடலில் கிட்டத்தட்ட 40 நாட்டிகல் மைல் தொலைவில் கடலோர காவல்படை கப்பல் மோதி விசைப்படகு தாழ்ந்து போனது. அதில் மொத்தம் 14 பேர் இருந்தனர். இருவர் மீட்கப்பட்டனர். மூவர் பலி. மீதியுள்ள 9 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. இன்று 5 நாட்கள் ஆகிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டிய கப்பல்படை மோதிவிட்டு அவர்களை மீட்காமல் சென்று விட்டது. குரங்கனி தீ விபத்தை விட மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது. இது வரை எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை. அந்த 9 பேர் குடும்பங்கள் கதி கலங்கிப் போய் இருக்கின்றன. ஒக்கி புயல் பாதித்த அதே மீனவப் பகுதி மக்கள்தான் தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசு தேடுகிறது தேடுகிறது தேடிக் கொண்டே இருக்கிறது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.