12/08/2018

யின் – யாங்...


பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, எதிர்மறை – நேர்மறை என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால் எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை, ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.

ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.

மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.

இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.

யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்.

அரிஸ்டாட்டிலின் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைவதில்லை, அதில் இரண்டும் கலந்திருக்கிறது.

2.மேல் நோக்கி செல்லுதல்...

உனது சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும்போது புவியீர்ப்பு விசை உனது சக்தியை பாதிப்பதில்லை என எல்லா ஞானிகளும் விளக்கி கூறுகின்றனர். உனது சக்தி வேறொரு விதியின் படி செயல்பட ஆரம்பிக்கிறது, ஒளியின் விதி. நீ மேல் நோக்கி எழ ஆரம்பிக்கிறாய், பின் மனிதனுக்கு ஒரு புதுவிதமான வித்தியாசமான உலகத்தைப்பற்றி தெரிய வருகிறது.

ஜென்குரு உன்னை அடிக்கும்போது உனது சக்தி மேல் நோக்கி எழுகிறது, நீ கவனமடைகிறாய்.

புத்திசாலித்தனம் மேல் நோக்கி எழுகிறது, அறிவுஜீவித்தனம் கீழ் நோக்கி செல்கிறது.

எந்த அளவு உன்னிடம் தன்னுணர்வு இருக்கிறதோ அந்த அளவு உனது சக்தி மேல் நோக்கி பாய்கிறது.

குணடலினி என்பது ஒரு மையம், அது சக்தி மேல் நோக்கி எழும்போது செயல்பட ஆரம்பிக்கிறது.

தண்ணீரும் மேல் நோக்கி போகும். ஆனால் அதற்கு சிறிதளவு சூடு தேவை, அவ்வளவுதான்.

3.அழகு..

அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.

அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.

உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.

ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.

வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.

எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.

இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.