நம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.
பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும்.
அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள்.
ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர்.
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.
நாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு.
ஆவணி மாதம் வரும் பஞ்சமி திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது.
நம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.
"நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே "என்ற பாடலில்,
"குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்,
குருந்திரு மாயனுக்குக் குடைநீயானாய்,
கற்றைக்குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்”
என்று நாகத்தின் சிறப்புகளைச் சொல்கிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.