நீங்கள் ஒரு தொழிலைச் செய்ய எண்ணும் போது என்ன மனப்பாண்மையில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் செயல் வெற்றி - தோல்வியை அடைகிறது, வெற்றி மனப்பான்மையுடன் செயல் பட்டால் வெற்றியும், தோல்வி மானப்பான்மையுடன் தன்னம்பிக்கையற்று செயல்பட்டால் தோல்வியையும் அடைகிறீர்கள், ஆகவே வெற்றியும், தோல்வியும் உங்கள் மனப்பான்மையிலிருந்து உருவெடுக்கிறது, மன்ப்பான்மை என்பது, உங்கள் உள்ளத்தில் தொடர்ந்து நிலைபெறும் சிந்தனைதான் மனப்பான்மையாக மாறுகிறது.
வெற்றி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கும் மனச்சித்திரங்களே வெற்றி சிந்தனை , இது மீண்டும் மீண்டும் பதிவாகும் போது வெற்றி மனப்பான்மையாக மாறுகிறது.
நீங்கள் விரும்பினால் மனச்சித்திரத்தை மாற்றி ஆழ் மனம் (இதனை சமயோசித அறிவாகக் கொள்ளலாம்) கட்டளை உஙகளுக்கு கைகொடுக்கும், ஆழ்மனக் கட்டளை மூலமும், மனச்சித்திரங்கள் மூலமும் வெற்றி மனோபாவத்தை உருவாக்கிட முடியும், நீங்கள் ஆழ்மனச்சக்தியை பெருக்கி கொண்டால் உழைப்பில் பத்தில் ஒருபங்கு குறைந்தாலும், விளைவு பத்து மடங்காக உயர்ந்திட முடியும், கடும் உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பதை ஆழ்மனத்திற்கு ஈடு இணை இல்லை என்ற புது பழமொழியை புரிந்து கொள்ளலாம்,
ஆழ்மனதை ஒரு தேவதை என்றே கூறலாம், அது ஆற்றல் மிக்க தேவதை, உங்களுக்கு விசுவாசமான தேவதை. நீங்கள் கேட்பதை பெற்றுத தரும் சக்தி உண்டு, ஆக அது தேவதையோ, அரக்கனோ என்பது நீங்கள் கொடுக்கும் கட்டளையைப் பொருத்தது. உங்கள் கட்டளையின் எண்ணம் முறன்பாடானால் கிடைப்பதும் முறன்பாடாகவே அமையும், உங்களின் ஆழ்மனச்சக்தி பெருகி விட்டால் நீங்கள் நினைத்ததை விரும்பியவாறு அடைய முடியும். இதன் கருத்தை கொண்டே ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
Positive thinking always ever success Nagative thinking always never success
எவராயினும், எந்நிலையிலும், ஆழ்மனக்கட்டளையை நம்பிககையோடு கொடுத்து அடையப் போகிறோம் என்னும் விசுவாசத்தை வளர்த்து நினைத்ததை நினைத்தபடியே அடைய முடியும்.
சிந்தனையிலிருந்து - செயல் பிறக்கிறது. மனத்தின் எண்ணமே செயலுக்கு ஊக்கம் . எண்ணம் திண்ணம் பெறும்போது நினைத்ததை அடைய வெற்றியாக முடிகிறது.
ஆழ்மனக்கட்டளையும. மனச்சித்திரமும் சேர்ந்தது தியானம் - தியானம் தவம் எனப்படுகிறது. தவ வலிமையால் நம் முன்னோர்கள் நம்ப வியலாத அற்புதமான சாதனைகளை செய்ததனர் என்பதை நாம் அறிவோம். ஆழ்மன கட்டளை கொடுக்கும் போதே அதற்கேற்ப மனச்சித்திரம் வரைவதன் மூலம் நீங்கள் அற்புதங்களை நிகழ்த்துபவராக மாறிவிடுகிறீர்கள்.
உங்களின் நீண்டகால குறிக்கோள்களான தியானம் செய்யும் போது உங்களது நம்பிக்கை ஒரு மந்திர சக்தியாகவே பெருக்கெடுக்கிறது. எனவே ஆழ்மன சிந்தனை - தியானம் (ஆல்பா) மூலம் வெற்றி நிச்சயம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.