24/06/2018

காது வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்.?


உடலில் உண்டாகும் எல்லா பிரச்னைகளையும் கவனிக்கும் நாம் காது சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் பற்றி கவலைப்படுவதே இல்லை.

அப்படி காது வலி போன்ற பிரச்னைகள் வந்தால், எப்படி சமாளிப்பது?

1. நாயுருவிச் செடியின் இலையில் இருந்து சாறு எடுத்து, காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

2. மாதுளம் பழச் சாறு எடுத்து, சிறிது சூடாக்கி ஆறிய பிறகு காதில் இரண்டு சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

3. கற்றாழையைத் தீயில் லேசாக வாட்டி அதில் இருந்து சாறு பிழிந்து, காதில் மூன்று சொட்டுகள் விட்டால் சீழ் வடிவது நின்றுபோகும்.

4. தென்னை மர வேரின் சிறு பகுதியை எடுத்து அரைத்து தேங்காய் எண்ணெய்யில் போட்டு சூடுபடுத்தி, ஆறிய பிறகு இரண்டு சொட்டுகளைக் காதில் விட்டால் காது வலி குணமாகும்.

5. வெள்ளைப் பூண்டை (3) நன்றாக அரைத்து பஞ்சில் ஒற்றி எடுத்து, இரவு படுக்கும்போது அந்தப் பஞ்சை காதில் வைத்துக்கொண்டு துாங்க வேண்டும். இப்படித் தொடர்ந்து மூன்று நாள்கள் செய்தால், காது இரைச்சல் குணமாகும்.

6. வசம்பைச் சுடும்போது வரும் புகையை, காதுக்குள் செலுத்திக் கொண்டால் காது இரைச்சல் குணமாகும்.

7. காதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு விட்டு பஞ்சை வைத்து அடைத்துக் கொண்டால், காது குடைச்சல் சரியாகி விடும். காதில் அதிக சாறு விடக் கூடாது. கவனம் தேவை.

8. காதில் மூன்று சொட்டு தாழம்பூ சாறு விட்டால், காது வலி குணமாகும்.

9. மணத்தக்காளிக் கீரை, துளசி இரண்டையும் சம அளவு எடுத்து சாறு பிழிந்து காதில் மூன்று சொட்டுகள் விட்டுக்கொண்டால் காது வலி சரியாகும்.

10. எருக்கம் பூ மொட்டை எடுத்துக் கசக்கி காதில் இரண்டு சொட்டு விட்டால், காது வலி குணமாகும்.

11. வெற்றிலைச் சாற்றை மூன்று சொட்டு காதில் விட்டால் காது வலி குணமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.