24/06/2018

போல் ஹெல்யர் (Paul Hellyer):..


1960களில் கனடாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் இவர். கனடாவின் விமானப்படை, மற்றும் கடற்படை ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, இன்று இருக்கும் விதத்தில் கனடா இராணுவப் படைக் கட்டமைப்பு மாற்றியமைக்கப் பட்டதற்கு இவரே மூல காரணமாக இருந்தவர். கனடா அரசின் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதியுயர் மட்ட அதிகாரியாக இருந்தவர்.

இது மட்டுமல்லாமல் இவர் ஒரு பொறியியலாளராகவும், எழுத்தாளராகவும் கூட இருந்தவர். இவரது செல்வாக்கு எத்தகையது என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

பறக்கும் தட்டுக்கள், மற்றும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களை வெளிப்படையாக உலகுக்குச் சொன்ன பிரபலமானவர்களுள், இவரது கருத்துக்களுக்கென்று தனி மரியாதை சர்வதேச மட்டத்தில் உண்டு. 

RT என்ற செய்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியொன்றின் போது,
#இதுவரை_நான்கு_பிரதான_வேற்றுக்கிரகவாசி_இனங்கள் ஆதாரங்களோடு கண்டறியப் பட்டுள்ளன” என்று இவர் பச்சையாகவே குறிப்பிட்டார்.

பறக்கும் தட்டுக்கள் குறித்த முதலாவது நேரடி அனுபவம் இவருக்கு 1967ம் ஆண்டு தான் ஏற்பட்டது. ஜூன் மாதம் 3ம் திகதி 1967 இல், அமைச்சர் ஹெல்யர், அல்பெர்ட்டாவில் இருக்கும் செயின்ட் போல் நகரில் பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்காகவென்றே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமானத்தளம் ஒன்றை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைப்பதற்குச் சென்றிருந்தார்.

கனடாவின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டியே இந்தப் புதிய விமானத்தளம் இவரால் திறந்து வைக்கப்பட்டது.

அங்கு சென்ற அவரது ஹெலிகப்டர் தரையிறங்கும் போது, இறங்குதளத்துக்குப் பக்கத்தில் வடிவமைக்கப் பட்டிருந்த அறிவித்தல் பலகையில் விசித்திரமான ஒரு வாசகம் எழுதப் பட்டிருந்ததை அவர் வாசித்தார். அந்த வாசகம் இது தான்:

“பறக்கும் தட்டுக்கள் தரையிறங்குவதற்கென்று வடிவமைக்கப்பட்ட உலகின் முதலாவது விமானத்தளமாக செயிண்ட் போல் விமானத்தளமே திகழ்கிறது. மனித இனம் பூமியின் எல்லையைத் தாண்டிய விண்வெளியில் சமாதானத்தை வேண்டுவதைப் பிரதிபலிக்கும் ஒரு சின்னமாகவே இந்த விமானத்தளம் திகழ்கிறது.

மேலும், வெவ்வேறு கிரகங்களுக்கு இடையில் பிரயாணம் செய்வோரது (Intergalactic beings) எதிர்காலப் பிரயாணங்கள் பாதுகாப்பானவையாக இருப்பதற்கான உத்தரவாதச் சின்னமாகவும் இது திகழ்கிறது. பூமியிலிருந்தும், மற்றும் வெளியுலகிலிருந்தும் வருகை தரக் கூடிய அனைவரையும் இந்த விமானத்தளமும், இந்த நகரமும் அன்போடு வரவேற்கிறது”

இந்தச் சம்பவத்துக்குப் பல ஆண்டுகளுக்கு பிறகு, செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டில், அமைச்சர் ஹெல்யர், வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிப் பகிரங்கமாகவே பல மீடியாக்களிலும் பேச ஆரம்பித்தார்.

செப்டம்பர் மாதம் 25ம் திகதி 2005 இல், டொரண்ட்டோ நகரில் நடைபெற்ற ஓய்வுபெற்ற அரசியல்வாதிகளின் சம்மேளனத்துக்கு சிறப்பு விருந்தினராக இவர் அழைக்கப் பட்டிருந்தார். அங்கு இவர் நிகழ்த்திய சொற்பொழிவின் போதும் பகிரங்கமாகவே வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய பல தகவல்களைப் போட்டு உடைத்தார்.

தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தனது நிலைபாடுகளை இவர் உலக அரங்கில் பகிரங்கப் படுத்த ஆரம்பித்தார்.

மேலும், இவரது கருத்துக்கள், ஒரு தனி நபரின் கருத்து எனும் அடிப்படையில் கூட அமைந்திருக்கவில்லை. மாறாக, இவரது வாக்குமூலங்களை நாலா புறங்களிலும் இருந்து நூற்றுக்கணக்கான இராணுவ உயர் அதிகாரிகள் ஊர்ஜிதப் படுத்தத் தொடங்கினர்.

மேலும், பல்வேறு நாடுகளில் இந்தக் காலப்பகுதியையொட்டி வெளியான உத்தியோகபூர்வமான பல அரச ஆவணங்கள் கூட..

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி இவர் முன்வைத்த கருத்துக்களை மேலும் உறுதிப்படுத்துவதாக இருந்தன. இது போன்ற பல்வேறு அடிப்படைகளில் வேற்றுக்கிரகவாசிகளின் மர்மம் மிக்க நடவடிக்கைகள் பற்றி இவர் மக்கள் மன்றத்தில் முன்வைத்த கருத்துக்கள் மறுக்க முடியாதவாறு நிரூபனமாயின.

போல் ஹெல்யர் குறிப்பிட்ட அந்த நான்கு வேற்றுகிரகவாசி இனங்கள் யாவை? என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.