24/10/2018

பிரம்மத்தை நோக்கி - 1...


இந்த பிரபஞ்சம் இருவேறு பண்புகளை கொண்டது. ஒன்று அலைப்பண்பு மற்றொன்று துகள் பண்பு.

ஒளியின் வேகத்திற்கு உட்பட்டவை அனைத்தும் துகள் பண்புகளையும், உட்படாதவை அலைப் பண்புகளையும் கொண்டுள்ளது.

எதையும் சாராத ஒரு தனிமுதற் பொருள் உண்டென்றால் அது ஒளி(கடவுள்) மட்டுமே. இது சார்பியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது.

பிரபஞ்சம் காலத்திற்குள் இல்லை. காலம்தான் பிரபஞ்சத்திற்குள் உள்ளது. உண்மையில் காலம் என்ற ஒன்றே இல்லை.

உங்களால் ஒளி வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கே காலம் இருக்காது உறைந்து போகும்.

ஒருசெல் உயிரியாக இருந்தபோது இயற்கை அதற்கு அளித்த பாடம் தகுதி உள்ளது தப்பி பிழைக்கும், தகுதியற்றது அழிந்துவிடும்.

எனவே ஒருசெல் உயிரி உணர்ந்தது இந்த மழை வெப்பம் குளிர் புயல் போன்ற கடினமான சூழலில் தனித்து உயிர்வாழ முடியாது என்பதே.

எனவே படிப்படியாக பரிணாமம் அடைந்து தொகுப்பாக பிணைந்து கூட்டு உயிரிகளாக சேர்ந்து வாழ ஆரம்பித்தது. ஒவ்வொரு உயிரிக்கும் தனித்தனி தேவைகள் இருந்தது.

அவற்றை பெற்றுக்கொள்ள அவைகளில் இருந்து எண்ணங்கள் தோன்றியது. அந்த எண்ணங்களின் தொகுப்பான மனம் அவற்றை பாதுகாப்பதோடு அவைகளின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லது.

பல கோடி உயிரிகள் சேர்ந்து தொகுப்பாக வாழ்ந்து தத்தம் தேவைகளை மனதின் மூலம் பெற்றுக் கொண்டு வருகிறது.

கடைசியாக பெரிய அளவில் பரிணாமம் அடைந்து அவை சுமார் 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்புகளாக கூடி வாழ்கிறது.

அவைகளை பாதுகாக்கவும் அவற்றின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மனம் 24/7 மணி நேரமும் அயராது உழைக்கிறது.

ஆனால் அனைத்து உயிரிகளின் நோக்கமும் அவற்றின் பயணமும் சமநிலையை பெறுவதே, அதாவது பிரம்மத்தை அடைவதே.

இந்த 75 லட்சம் கோடி உயிரிகளின் தொகுப்பு வேறெதும் இல்லை, அதுதான் மனிதன். பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.