24/10/2018

மலபார் என்பது தமிழே...


கி.பி.1779 இல் மலபார் பாஷை என்று அழைக்கப்பட்ட தமிழ்.

கி.பி.1650 - 1800 ஆண்டுகளில் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் வந்த அமெரிக்க ஐரோப்பிய பாதிரியார்கள் பைபிளை தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டுவருவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

ஆசிய மொழிகளிலேயே தமிழ் மொழியில் தான் முதல் முதலாக பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும்.

அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக தமிழ்ச் சொற்களை சேகரிக்கும் வேலையை செய்தனர்.

தமிழ்மொழியை மலபார்மொழி என்றழைத்தனர்.

அந்தக் காலகட்டத்தில் தமிழ் மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்ட அகராதியில் ஒன்றை உங்கள் பார்வைக்கு பதிவிடுகின்றேன்.

குறிப்பு : மேல்நாட்டினர் தான் தமிழ் மொழிக்கு அச்சுகலையும் தமிழ் அச்சு எழுத்துக்களையும் உருவாக்கித் தந்தனர். அவ்வாறு முதல்முதலாக உருவாகி கொண்டிருந்த அச்சு எழுத்துக்கள் மரக்கட்டைகளில் செய்தவையாக இருந்தன. அத்தகைய மரக்கட்டை அச்சு எழுத்துக்களில் தான் இந்த நூல் அச்சிடப்பட்டுள்ளது.

மேலும் சில விபரங்கள்...

1577 ல் கிறித்துவ மிஷினரி அம்பலக்காடு (பாலக்காடு மாவட்டம்) அச்சகத்தில் அச்சடித்த முதல் மலையாள நூல் அம்மொழியை மலவார் அல்லது தமிழ் என்கிறது (கால்டுவெல் குறிப்பு).

1679 செப்டம்பரில் கண்டியில் இருந்து தப்பி அனுராதபுரம் வந்த நாக்ஸ் (Knox) என்ற ஆங்கிலேயர் அந்த அனுபவம் பற்றி எழுதிய Captivity and escape of Captain Knox என்ற புத்தகத்தில் மல்வத்து ஓயா ஆற்றைக் கடந்து (தமிழில் அருவி ஆறு) அனுராதபுரத்தை நோக்கி சென்ற போது அங்கே மலபார்கள் (தமிழர்கள்) குடியிருந்ததாகவும்.. தான் பேசிய சிங்களம் அம்மக்களுக்குப் புரியவில்லை என்றும் பதிவு செய்துள்ளார்.

ஆக, மலபார் (அல்லது மலவார்) என்று தமிழே அழைக்கப்பட்டது என்பது உறுதியாகிறது.

படம்: தமிழும் இங்கிலிசுமாயிருக்கற அகராதி..

A Malabar and english dictionary
english missinaries madras
first edition 1779.. printed vapery...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.