குஜராத் கலவரத்தில் மோடிக்கு ஆதரவாக செயல்பட்டவர், மோடியை அந்த வழக்கிலிருந்து வெளியேவர உதவியவர், அமீத்ஷாவிற்க்கு நம்பிக்கையான ஆள், எதிர்க்கட்சிகளை மிரட்டி பணியவைக்க உதவுவார் என RSS கும்பலால் சிபிஐயில் சிறப்பு இயக்குனராக திணிக்கப்பட்டவர் அஸ்தானா..
அவர் மீது சிபிஐ ஊழல் வழக்கை பதிவு செய்துள்ளது... ஊழல் வழக்குள்ள அவரை மட்டும் பணியிலிருந்து அனுப்பாமல், வழக்கை போட்ட சிபிஐ டைரக்டர் முதல், மோடியின் செல்லப்பிள்ளையான அஸ்தானா மீதான ஊழல் வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி வரை இரவோடு இரவாக அந்தமானுக்கு தூக்கியடிக்கப்படுள்ளார்கள்..
இத்தனைக்கும் சிபிஐ டைரக்டரை எடுத்தேன் கவிழ்த்தேன் என மாற்ற முடியாது.. அவருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது, அதற்கான உயர்நிலை குழு தான் செய்யமுடியும்..
அவசரம் அவசரமாக நள்ளிரவில் CBI இயக்குனர் அலோக் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றபட காரணம் ரஃபேல் விமான ஊழல்..
ரஃபேல் விமான ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவார் என்ற அச்சத்தில் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது ஏழைத்தாயின் மகன் மோடி அரசு..
இவர்தான் நீரவ்மோடி விஜய்மல்லையா உள்ளிட்ட வங்கி பணத்தை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வழக்குகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்..
இந்திய வரலாற்றில் முதல் முறையாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட இரண்டு தளங்களை யாரும் நுழைய முடியாதபடி சீல் வைத்து இருக்கிறார் மோடி...
ரஃபேல் விமான ஊழல் வழக்கு உள்ளிட்ட பாஜக மோடி அரசின் முக்கிய புள்ளிகள் மீது இருக்கும் வழக்குகளின் ஆதாரங்கள் உள்ள பைல்களை அழிக்கும் முயற்சியே இது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.