24/10/2018

ஆத்மாவை உணர்வது எப்படி?



முதலில் இப்போது இருக்கற பார்வை மாறனும்.

தனித்தன்மையோடு கூடிய ஜீவன்.... தனக்கு அன்னியமா ஒரு உலகத்தை அறிகிறான்.

அதாவது... "காண்பான்" "காட்சின்னு" இரண்டா இருக்கு.

இந்தக் காண்பானுக்கும்... காட்சிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு.

இது தான் அகந்தையா எழுந்து சம்பந்தத்தை உண்டு பண்றது.

இந்த அகந்தை உண்மையிலே சித்து (அறிவு) தான்.  சித் இல்லாதது ஜடம்.

இந்த காண்பான் காட்சி இரண்டுலே... காண்பான் பக்கம்தான் சித் இருக்கு.

இந்தக் காண்பான் யாருன்னு தேடினா.... காட்சி மறைஞ்சிடும்.

காண்பான் சூட்சுமமும் அதிசூட்சுமமுமா ஆகிக்கொண்டே போய் உண்மையான காண்பான் மாத்திரமா மிஞ்சும்.

இதுக்குப் பெயர் “திருஷ்ய விலயம்” அதாது காட்சி இல்லாமே போறது.

கேள்வி: ஆத்மாவை உணர்வதற்கு எதுக்கு காட்சி (உலகம்) இல்லாம போகணும்? உலககாட்சி இருக்கும்போதே ஆத்மாவை உணரமுடியாதா?

பதில்:  முடியாது.

உலகக் காட்சியை இல்லாமே பண்றதுன்னா... தனித்தனியா உலகம்ன்னும் நாமன்னும் இரண்டு இல்லாமே... உலகத்தைப் பிரிக்க முடியாத ஒரே வஸ்துவா உணர்றது.
பாக்கற உலகத்துக்கு... வாஸ்தவத்திலேயே இருப்பு இருக்கு...ங்கற தப்பான பார்வை நீங்கறதுதான்.... வாஸ்தவமான இருப்பைத் தெரிஞ்சிக்கிறது.

ஒரு கயிறைப் பாம்பு இல்லேன்னு பாத்தாப்போதும்.

கயிறைப் தேடத் தேவையில்லே..

பாம்பு போயிடுத்துன்னா... கயிறுதான் மிஞ்சும்.

இந்தப் தப்பான பார்வை போகாம உண்மை புலராது.

கேள்வி: இந்த உலகக்காட்சி எப்போது நீங்கும்? எப்படி நீங்கும்?

பதில்: நாம உண்மை... இந்த உலகம் உண்மை... ன்னு கற்பிக்கற மனம் அறவே நாசமாகும்போது உலகக்காட்சி நீங்கிடும்.

இந்தத் தவறான எண்ணந்தான் எல்லா துக்கத்துக்கும் காரணமாயிருக்கு..

இந்த மனம் என்பது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.